திருமணம்
ஈராறு ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் குறுஞ்சி மலர் போல் தோழியின் முகம் காண.....
மேகக்கூட்டங்கள் மெதுவாய் முகந்துடைக்க....
வானத்து தேவதைகள் வாழ்த்துக்கள் முரசொலிக்க ....
நாணத்தில் பெண் மறைய
கொண்ட நாட்டத்தில் ஆண் பார்க்க ....
சங்கீத சத்தத்தில் சலனங்கள் ஓடி விட
மயன் வந்து மணமேடை அமைத்துத்தர
மந்திர முழக்கத்தில் மற்றவைகள் மறைந்துவிட
மங்கள நாண் கழுத்தில் மலர் கனவு விழியில்
பெற்றவரின் முகம் பார்த்து கண்ணீர் துளி பொங்கிவர....
குடும்பம் சுமப்பதர்க்காய் என் குழந்தை செல்கிறது.......
என்று பெற்றவர்கள் வழ்த்துக்களோ வானம் வரை சென்றுவர ....
வாழட்டும் என் தோழி வையகம் உள்ளவரை ......