காதலுடன் காத்திருக்கிறது ஒரு ஆத்மா
தொடர்ச்சி.....
பாடல் முடிந்து நேரம் இப்பொழுது 8:30 என்று ஒலிபரப்பப்பட்டது.அப்போதுதான் ரோஜாவுக்கு 9 மணிக்கு லெக்சர்ஷ் இருப்பது நினைவுக்கு வந்தது.நேரத்தை கவனிக்காமல் நின்றதற்கு தன்னை தானே திட்டிக்கொண்டு மிக விரைவாக தன் வேலைகளை முடித்துக்கொண்டு ரிஃபன் கூட எடுத்துக்கொள்ளாம கல்லூரிக்கு வந்தாள். கடிகாரத்தை பார்த்தவள் நேரம் 9:15 என்றவுடன் பதறிப்போய் லெக்ஸர் ஹாலுக்கு ஓடியே சென்றாள்."எஸ் கியூஸ் மீ மாம்" என்றாள் கதவோரத்தில் நின்றபடி.கோபத்துடன் திரும்பிப்பார்த்த லலி மாம் ஒரு பதிலும் பேசாமல் தலையை திருப்பிக்கொண்டார்.சிறிது நேரத்தின் பின்"திஸ் ஸ் யுய லாஸ்ட் வானிங் கம் இன்" என்றார்.கொஞ்சம் கவலையாகவே வந்து தன்னோட பிரண்ட் தாணியா பக்கத்துல அமர்ந்தாள்.