தரத்தின் தரம்
தரம் ஒரு பயணம்
அது இலக்கல்ல
தரத்தின் தேடல்
உன்னுள் தொடங்குகிறது
உன் படைப்புகள்
உன் எண்ணங்களின் மறுவடிவம்
உன் பொருட்களை
மறுசுழற்சி செய்யும் முன்
உன் எண்ணங்களை
மறுசுழற்சி செய்
தரத்தின் உன்னதத்தை
உணர்ந்து பார்க்க
உன் படைப்புகளின் தரம் பேசும்
உன் உழைப்பின் தரத்தை
உன் உள்ளத்தின் தரத்தை
இதை விடவா
விளம்பரங்கள் பேசிவிடும்
உன் ஸ்தாபனத்தின் உயிரோட்டம்
உன் தொழிலின் எதிர்காலம்
வாடிக்கையாளரின் நம்பிக்கை
உயரும் லாபம்
இவை என்றும் நிலைக்க
ஒரு ரகசியம் சொல்லவா
தரம்
விளம்பரங்கள் தேவையில்லை
விலை குறைக்க தேவையில்லை
வாடிக்கையாளர் பின் ஓட தேவையில்லை
நஷ்டப்பட தேவையில்லை
உன்னிடம் தரம் இருந்தால்
உன் பொருட்களின் தரம்
உயர்த்தவேண்டும்
உபயோகிப்பவனின் வாழ்க்கை தரத்தை
தரம்
செயல் அல்ல
அது பழக்கம்
ஏனெனில்
தொட்டில் பழக்கம்
சுடுகாடு மட்டும்