என் அன்பான உறவே வா

என் தாத்தா,பாட்டியை போல் கற்பனை கதை சொல்லி என்னை உறங்க வைக்க....

வா...

என் நண்பனை"போல் கஷ்டத்திலும்,சந்தோஷத்திலும் பங்கெடுத்து ஆறுதலாய்,தோளை தட்டி கொடுக்க.......

வா.....

என் தந்தையைப் போல் தவறு செய்யும் பொழுது தட்டிக்கேட்டு அறிவுரை கூற...

வா.....

என் தாயைப்போல் நான் அழும்பொழுதும்,சிரிக்கும் பொழுதும் என்னை மடியில் படுக்க வைத்து என் தலை முடியை கோதி விட்டு அன்பு காட்டவும்,ஆறுதல் சொல்லவும்.....

வா....

என் உயிரையும் எழுதி கொடுக்கிறேன் உனக்காக என் அன்பே.....

உன் அன்பிற்காக ஏங்கும் அன்புடன் கிருபா......

எழுதியவர் : கிருபாகரன்கிருபா (23-Nov-16, 9:14 pm)
சேர்த்தது : கிருபாகரன்கிருபா
Tanglish : en anpana urave vaa
பார்வை : 147

மேலே