சந்தனக் காற்றே
இத்தனை வருடம் பிறந்ததின் பயனாய்
என் உள்ளம் உன்னை கண்டதடி!
எத்தனை சோகம் உள்ளம் கொண்டும்
உன் உருவம் பார்த்தது மறந்ததடி!
இந்த நதியோ எங்கு பிறந்தது?
இன்று ஏன் என் கண்ணில் வழியுது?
இந்த பறவை எங்கு வாழ்ந்தது?
இருபது வயதில் ஏன் இங்கு வந்தது?
ஓ! என் ஆக்ஸிஜன் நிலவே
உன்னால் நான் பௌர்ணமி ஆகிறேன்!
ஓ! என் நெட்டை புறாவே
உன்னால் நான் பறவை ஆகிறேன்!
உனக்குள் இருப்பது எந்த திமிரோ?
அழகின் திமிரா? அடக்கத் திமிரா?
உனக்குள் இருப்பது எந்த குணமோ?
பனித்துளி குணமா? பூவின் குணமா?
என்னை கொல்ல ஏன்நீ வந்தாய்?
அழகை ஆயுதமாய் ஏன்நீ கொண்டாய்?
வந்த தென்றல் உடல் தீண்டலாம்!
ஆனால் நீயோ உயிர் தீண்டினாய்!