வரம் தரும் ஐய்யப்பனே

வன்புலி வாகனத்தல் வீற்றிருக்கும் ஐயனே
வரம் நாடி வரும் பக்தர்களுக்கு வரம் தரும் வள்ளலே
பம்பையில் அவதரித்த பாலனே
பாமரையும் ஆட்கொண்ட பரந்தாமனே
அன்னையின் நோய் தீர்த்த ஐயனே
அகிலத்தையும் காப்பவனே
நெய்யபிக்ஷேக பிரியனே
உன்னை நேரில் காணவே என் மனம் நாடுதய்யா
துளசி மணி மார்பில் அணிந்து தினம் உன் சரணம் பாடிடவே
துன்பங்கள் யாவும் விலகிடுமே
பெருவழி பாதையாக நடந்தே உன் தலமே வந்தோமையா
பதினெட்டாம் படியேரிடவே பாவங்களும் தீர்ந்திடுமே
ஐய்யனைநேரில் காண்டவுடன்
இனி இன்பமெல்லாம் பெருகுமே மணிகண்டணின்அருளாளே
வாழ்வும் வளம் பெருமே
இனி சரணம் கோக்ஷம் பாடிடுவேனே என் ஜென்மம் முழுவதுமே
சாமியே சரணம் ஐய்யப்பா

எழுதியவர் : குமா கருவாடு (24-Nov-16, 12:07 am)
சேர்த்தது : கருவாடு
பார்வை : 144

மேலே