என்னைத் தாலாட்ட வருவாளோ

மழைக் காற்றாக வருவாளோ...
நெஞ்சில் பூமாரி பொழிவாளோ...
வண்ண பூவாட்டம் சிரிப்பாளோ...
இல்லை புலியாட்டம் முறைப்பாளோ...
முள்ளிருக்கும் மலரே முல்லை வருவாளா...
சுற்றும் முகில் கூட்டம் சென்று ஒழிவாளா...
கண்ணோரம் கனவுகள் பூக்கிறதே......


மழைக் காற்றாக வருவாளோ......


வான் வழி பாதையில் வர்ணம் தீட்டினாள்...
தோரணம் செய்து விண்ணில் மாட்டினாள்...
கானல் நீராய் மாயம் காட்டினாள்......
அனலும் புனலும் என்னுள் ஊற்றினாள்...
இதய நரம்பில் வீணை மீட்டினாள்...
வாழும் சாவை வந்து காட்டினாள்......
நான் வேண்டும் வரம் ஒன்று தாராதா...
நான் நீந்த நதி ஒன்று ஓடாதா...
சோகங்கள் மோகங்கள் ஆகாதா...
வேதங்கள் நாதங்கள் ஓதாதா......
விழியோடு மொழி கேட்கிறேன்......


மழைக் காற்றாக வருவாளோ......


களவு செய்யும் அவள் பார்வையில்...
நிலவு ஒளிரும் இள மேனியில்...
காணும் எல்லாம் இந்த காதலில்......
இமைகள் அசையவில்லைக் கண்களில்...
உதயம் உறங்கவில்லைப் பூமியில்...
ஊடல் கூடல் வேண்டும் வாழ்க்கையில்......
இரவுக்குள் வெயிலாக சுடுகின்றாள்...
பகலுக்குள் நிலவாக தொடுகின்றாள்...
மலருக்குள் தேனாக இருப்பாளா...
மனதுக்குள் தேனூற்றிப் போவாளா......
விழியோடு மொழி கேட்கிறேன்......


மழைக் காற்றாக வருவாளோ......

எழுதியவர் : இதயம் விஜய் (24-Nov-16, 11:45 am)
பார்வை : 266

மேலே