உன்னுடைய காதலி

உன்னைப் பற்றி ஏதும்
அறியாத பருவத்தில்
எதையோ நினைத்து
எதற்காகவோ உன்னைப் பற்றிக் கொண்டேன்!
காதலுக்கு காரணம் தேவையில்லை
காரணமின்றி காரியமில்லை -உன்னைப் புரியாத போது வந்த நேசம்!
புரிந்த போது மோகமானது!
வந்தது விதியென்று கொண்டால்
விதியை விதிப்பது நீயாகிப் போகின்றாய்!
வாழ்வும் தாழ்வும் உன்னால்தான்
சாகாத வாழ்விற்கும் நீ
வாழாமல் சாவதற்கும் நீ
சாக்காடு வந்த பின் போவதற்கும் நீ!!!!
உன்னை கூடுவதற்கு ஏங்கும் மனம்
அடைந்த பின்னும் அலைபாய்கிறது!
அமுதும் நஞ்சும் கலந்து செய்த சலவை நீ!!!!
இங்கு
உன்னால் இறப்பவனும்
உனக்காக இரப்பவனும்
இல்லாத நாளில்லை!!
பற்றற்றவனின் பாதம் பார்க்கவும் நீ வேண்டும்!
உன்னைப்
பெற்றவன் பணக்காரன்!
பெறாதவன் ஏழை!
கையேந்துபவன் பிச்சைக்காரன்
பறிப்பவன் திருடன்
கொடுத்தவன் ஏமாளி
பதுக்கியவன் புத்திசாலி
அப்பப்பா
எத்தனை முகங்கள்!
எத்தனைப் பெற்றாலும் ஏனோ
உன்மீதான தாகம் மட்டும் தணிவதேயில்லை யாருக்கும்!
உலகமே உன் காதலர்கள் -இருந்தும்
உன்னுடைய காதலி அந்த "தனலட்சுமி"தான்!!!!

எழுதியவர் : கலைவேங்கடம் (26-Nov-16, 1:41 pm)
சேர்த்தது : kalaivenkatam
Tanglish : unnudaiya kathali
பார்வை : 59

மேலே