வேண்டுவது....

எஞ்சினத்தின் வேட்கையில்
வஞ்சகர் கோடி
மாண்டிட வேண்டும்,
துச்சமென எண்ணி
இவ் வையகத்தை
வதைத்திட வேண்டும்,
புத்துயிர் கோடி
முளைத்திட பல
விதைத்திட வேண்டும்,
நொடியில் மறைந்திடும்
புது உருவம்
தரித்திட வேண்டும்,
பாட் டிசைத்தால்
இப் பாரினையே
பிளந்திட வேண்டும்,
கண் ணிசைத்தால்
பல அண்டங்கள்
நோறுங்கிட வேண்டும்,
பாணர்கள் புகழ்
பாடி எம்மை
யிசைத்திட வேண்டும்,
மதி மயக்கும்
மங்கையர் ஆயிரம்
மொய்த்திட வேண்டும்,
எண்ணிய எண்ண
மெல்லாம் சட்டென
மெய்பட வேண்டும்,
கூறிய அத்தனையும்
இன் றெனக்கே
கிடைத்திட வேண்டும்.....

எழுதியவர் : கற்பனை கவி அபு (26-Nov-16, 1:45 pm)
சேர்த்தது : கற்பனை கவி அபு
Tanglish : venduvathu
பார்வை : 81

மேலே