இலட்சியப்பாதை
இளைஞனே
மேகங்களல்ல
உன் கனவுகள்
கலைந்து போவதற்கு !
கோலங்களல்ல
உன் எண்ணங்கள்
அழிந்து போவதற்கு !
மின்னல்களல்ல
உன் லட்சியங்கள்
தோன்றியவுடன்
மறைந்து போக !
வானம் அல்ல
உன் கண்கள்
கண்ணீரை
மழையாய்ப் பொழிய !
நீர்க் குமிழல்ல
உன் இதயம்
காற்று பட்டால்கூட
உடைந்து போவதற்கு !
புலம்பல்களல்ல
உன் கவிதைகள்
படித்துவிட்டு
பரணில் போடுவதற்கு !
சராசரி மனிதனல்ல நீ
பிறந்து,வளர்ந்து,
சாவதற்கு !
சாதிக்கப் பிறந்தவன் நீ !
சோதனைகளைக் கண்டு
சுருண்டு விழாதே !
எதிர்ப்புகளை
எதிர்கொள் !
வாழ்க்கைப் பயிருக்கு
நம்பிக்கை உரமிட்டு
நாள்தோறும்
வளர்த்து வா !
என்றாவதொரு நாள்
உன் இலட்சியத்தை
அடைவாய் என்ற
நம்பிக்கையோடு.......... !