தனிமையின் அருமை

தனிமையின்  அருமை

என் இனிய தனிமையே....


இந்த உலகில் யாரும் தனியாக வாழ்கிறேன் என்று கூற முடியாது இனியவர்களே...


உடன் உறவுகள் இல்லையே தவிர உங்களோடு உங்கள் தனிமை உறவாடி கொண்டு தான் இருக்கும்....


தனிமை மிக அழகானது...
அதே நேரம் மிக ஆபத்தானதும் கூட...


உங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் உங்களை பிரிந்தால் அந்த தனிமை நரகமே...

நீங்களே அந்த தனிமையை தேர்ந்தெடுத்து கொண்டால் அந்த தனிமை சொர்க்கமே...


தனிமையின் இனிமை எப்போது தெரியும் என்றால்??????



அந்த தனிமையை நீங்கள் ரசிக துவங்கும் பொது மட்டுமே...

தனிமையில் மட்டும் தான் உங்கள் ஆழ் மனதில் உள்ள ரகசியங்கள் உங்களுக்கே தெரியும் ...

தனிமை ஒன்றும் நமது எதிரி இல்லை...
சொல்லினால்
தனிமை என்றும் நம்மோடு தான் இருக்கிறது ...
அந்த தனிமை தெரியாமல் நம்மை பார்த்து கொள்பவர்களே நம் இனிய உறவுகள்...


தனிமையை தருவதால் அவர்கள் மீதொன்றும் குற்றம் இல்லை...
ரசியுங்கள் தனிமையை...
உணருங்கள் தனிமையை...
ஏற்றுக்கொள்ளுங்கள் தனிமையை...
வாழ்ந்து பாருங்கள் தனிமையை...
தனிமையில் மட்டுமே உங்கள் ராஜாங்கம் நடக்கும்..



அழகாக சொன்னால்...

தனிமையின் இனிமையில்...


இறந்த காலத்தை திரும்பி பாருங்கள்...!!!!!!!!!!!!

நிகழ் காலத்தை அனுபவியுங்கள்.....!!!!!!!!!!

எதிர்காலத்தை உங்கள் விருப்பம் போல் எண்ணிவையுங்கள்...அவ்வண்ணமே வாழ்ந்தும் பாருங்கள் உங்கள் எதிர் காலத்தை....கனவுகள் பல காணுங்கள் !!!!!

தனிமை....
அது என்றும் என் உற்ற தோழனே என் இனியவர்களே.....!!!!!


அதற்காக தனிமைதான் வாழ்க்கை என்று சொல்லவேண்டாம்...
தனிமையும் ஒரு அழகான அங்கம் நம் வாழ்வில் வகிக்கும் அன்பானவர்களே....!!!

எழுதியவர் : ப்ரீத்தித்தமிழினி (26-Nov-16, 6:28 pm)
பார்வை : 1269

மேலே