இதோ கறுப்புப்பணம் பற்றிய ஆதியும் அந்தமும்

உயர் மட்டத்தில்
பன்னாட்டு தொழிலதிபர்கள்
திறமையான அரசியல்வாதிகளினால்
எழுபது சதவிகிதமும்

இடையிலே
வளர்ந்து நிற்கும் பழுத்த வணிகர் மற்றும் உள்ளூர் ரியல் எஸ்டேட் வணிகர்களினாலும் உள்ளூர் அரசியல்வாதிகளினாலும்
இருபத்தைந்து சதவிகிதமும்

கடைநிலையில்
லஞ்சம் லாவண்யம் வரி ஏய்ப்பு
என்ற வகையில் ஐந்து சதவிகிதமும்

என்கிற கணக்கில் உருவாகலாம்
இங்கே கறுப்புப்பணம்.!

லஞ்சம் லாவண்யம் ஒழியப்போவதே இல்லை,
வரி ஏய்ப்பும் அப்படியே, ஏனெனில்
சின்னஞ்சிறு வணிகர்கள் வரி வடிவத்தில் அல்லது வரியளவுக்குத்தான்
லாபம் பார்க்கமுடியும் அவர்கள் வியாபாரத்தில்.

சின்ன சின்ன மீன்களை விழுங்கி வளரும் பெரிய திமிங்கலமாய்
இங்கே வளர்ந்து நிற்கும் நடுத்தர அல்லது ஓரளவு பெரிய நிறுவனங்கள்
சின்னஜ்சிறு வணிகர்களை அல்லது மிக சிறிய அளவு உற்பத்தியாளர்களை
ஆக்கிரமித்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய லாபத்தை கொடுக்காமல்
சுரண்டி தொழில் வளர்ச்சியை கெடுத்து விடும்போது வேறு வழியில்லாமல் அவர்களை அண்டி அவர்களை நம்பி பிழைப்பு நடத்தும் இவர்கள் செய்யும் வரி ஏய்ப்பு புரிந்து கொள்ள முடிகிறது, இயலாமை அல்லது இல்லாமை தான் இங்கே வரி ஏய்ப்புக்கு காரணம். மேலோட்டமாக பார்க்கையில் இந்த வரி ஏய்ப்பின் சதவிகிதம் இந்திய வங்கிகளின் வராக்கடன் அளவில் பத்தில் அல்லது நூறில் ஒரு மடங்காகத்தான் இருக்கும்.

அடுத்தது

இரண்டாம் வகையில் சொல்லப்பட்ட
வளர்ந்து நிற்கும் பழுத்த வணிகர் உள்ளூர் ரியல் எஸ்டேட் வணிகர்கள்
உள்ளூர் அரசியல்வாதிகள்

இன்று நாம் காணும் தீய புதர்க்காடாய் வளர்ந்து விட்ட
நம் சமூகத்தின் சாபக்கேடு.

அடிமட்டத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் கப்பம் கட்டி விட்டு இவர்கள் அதற்கு மாற்றாக ஆதாயம் தேடும் சுயநலகூட்டம்.

இவர்கள் தான் ஓரளவுக்கு கறுப்புப்பணத்தை பாதிக்கு மேல் ரொக்கவடிவில் வைத்திருக்கலாம் என்பது எல்லோருக்குமே தெரியும். அவர்களிடம் தான் தினம் ரொக்கப்பரிவர்த்தனை அதிகம் நடக்கலாம் என்று எல்லோராலும் நம்பப்படுகிறது.

இவர்கள் தான் லஞ்சம் லாவண்யத்தை அதிகம் தருகிறார்கள்,
அதே அளவு வரி ஏய்ப்பும் செய்கிறார்கள். அதிலிருந்து தப்பிக்கவும் செய்கிறார்கள்.

திரு.மோடி அவர்களின் நவம்பர் எட்டாம் தேதியிட்ட அறிவிப்பில் முடங்கி பின் விழித்து எழுந்து ஓரளவு ரிஸ்க் எடுத்து சரிவிலிருந்து மீண்டு கொண்டு இருப்பவர்கள் இவர்களில் மிக சிலர். மற்ற பெரும்பாலோர் தினம் தினம் செத்து செத்து பிழைத்துக்கொண்டு இருப்பார்கள்.

முதலில் சொல்லப்பட்ட மேல் மட்ட வர்க்கம் ரொக்கத்தை அதிகம் வைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் ஒரு கட்டமைப்பில் உலவுபவர்கள். பணத்தின் மேல் தலை வைத்து தூங்க வேண்டிய அவசியம் அவர்களுக்கில்லை. அவர்களுக்கு ஏற்கனவே வங்கியிடம் சரியான ஏற்பாடுகளும் கவனிப்பும் இருக்கும் படியால் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். அப்படியே சில ஆயிரம் லட்சம் கோடிகள் இருந்தாலும் அது அவர்களிடம் இருக்கும் மொத்த கறுப்புப்பணத்தில் ஐந்து சதவிகிதத்தை தாண்டாது. அந்த ஐந்து சதவிகிதத்தை அவர்கள் குப்பையில் கொட்டலாம், எரிக்கலாம், ஏன் கோவிலுக்கோ, சர்ச்சுக்கோ அல்லது ஆசிரமங்களுக்கோ அள்ளித்தெளித்து விட்டு அடுத்த வேலையைப்பார்ப்பார்கள்.

ஆக கூட்டி கழித்து பார்த்தால்
இது ஐம்பது நாள் ஓடும்
மெகா சீரியல்,
தட்ஸ் ஆல்.!

எழுதியவர் : செல்வமணி (26-Nov-16, 11:07 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 230

மேலே