விதைத்தது தினையானால்
"விதைத்தது தினையானால்"
""""""'"''''"''''''"""
தன் மகனுக்காக ஊர் ஊராய் பெண்
தேடிய செல்லதுரைக்கு அவன் மகன்
மீதான செய்யாத பழிச்சொல்லே
பெருந்தடையாக இருக்க.. 20கிமி
தொலைவில் பெண் கிடைத்த மகிழ்வில்..
தன் விசுவாச ஊழியருடன் பெண்
இருக்கும் ஊரில் இறங்கிவனுக்கு..
தொடங்கியது குழப்பம்.
தேனீர்கடையில் அமர்ந்தபடி
பெண்ணைப் பற்றிய குழப்பத்திற்கு
தெளிவுக்காக கேட்ட
கேள்விக்கெல்லாம் 'அட நம்ம சங்கரின்
பெண்ணுங்க' என்ற வார்த்தை
மட்டுமே பெண்ணை பற்றியதாய்
இருந்து மற்றபடி 'சங்கர் நல்லவன்,
உயர்மனம் கொண்டவன், அவன் அதில்
சிறந்தவன், இதில் சிறந்தவன்' என்ற
சங்கர் புராணமாய் இருந்ததில்..
கடுப்பாகிய செல்லதுரையின் மனமோ
'நல்லவனாய் நல்ல பெயரோடு நான்
இருக்க.. என் மகன் மீது இருக்கும் பழி
சொல்போல' சங்கரின் மகள் மீது
இருக்கும் பழி சொல்லை தேடி
களைத்துக் கொண்டிருந்தது. எந்த
முடிவிற்கும் வராதவனாய்
குழப்பத்தில் சாய்ந்த நேரம்
'விதைத்தது தினையானால்..
விளையுமா பனை ? நல்லவன்
வளர்ப்பும் அப்படியே' என்ற குரல்
கேட்டு திரும்ப கண்ட அவனது
விசுவாசி பணிவாய்
"ஏங்க ஐயா.. நான் எத்தன வாட்டி
சொல்றது.. அவன் ரொம்ப
நேர்மையானவன்'ங்க... அவனால உங்க
குடும்பத்துக்கு என்னைக்கும் இழுக்கு
வராது.. அவன் பொண்ண தாராளமா
உங்க வீட்டு மருமகளா ஏத்துக்கலாம்.."
என்று சொன்னதும்.. மனம் முழுவதும்
பூரிப்போடு விடைபெற்றார்
செல்லதுரை..
_moorthi