தெரு நாய்

நான் தினமும் ஒபீசுக்குப் போவதற்கு, கொழும்பில் உள்ள வெள்ளவத்தை விவேகானந்தா வீதி வழியே, என் வீட்டில் இருந்து நடந்து சென்று, பிரதான வீதியான காலி வீதியில் உள்ள பஸ் தரிப்பில் பஸ் எடுப்புது வழக்கம். விவேகானந்தா வீதியின் இருபக்கத்திலும் விலை உயர்ந்த வீடுகள். நிட்சயமாக அதன் உரிமையாளர்கள் செல்வந்தவர்களாகவே இருக்க வேண்டும். அவ்வீடுகளில், இரு வீடுகளுக்கு செக்கியூரிட்டி கார்ட்ஸ். சில வீடுகளின் கேட்டுகளில் “நாய் ஜாக்கிரதை” என்று எழுதப்பட்ட பலகை அலங்கரிக்கும். இக்காட்சிகளை இரசித்தபடி நடந்து போகும் எனக்கு, “சாந்தி நிலையம்” என்ற பெயர் பலகையோடு சேர்ந்து வீட்டு சொந்தக்காரர் வைத்தியத் துறையில் பெற்ற பட்டங்கள் கொண்ட பெயர் பலகையும் ஜொலித்தது. அப்பலகையின் கீழ் “நாய் ஜாக்கிரதை” என்று எழுதிய பலகையும் என் கவனத்தைக் கவர்ந்தது. பெயருக்கு ஏற்ப அமைதியான வீடாக அவ்வீடு இருக்கும் என நினைத்த எனக்கு, தினமும் அவ்வீட்டைத் தாண்டி போகும் போது கம்பீரமான ஒரு நாயின் குரல் கேட்கும். கம்பி போட்ட கேட்டுக்குப்; பின்னால் இருந்தவாறே இப்படி உரத்த குரலில் குரைக்கும் நாய்; , எப்போது என்மேல் பாய்ந்து, கடித்துக் குதறித் தள்ள வேண்டும் என்ற பார்வையொடு பார்க்கும். ஒரு காலத்தில் ரொடேசியா (Rhodesia)) என்ற பெயரில் இருந்த சிம்பாப்வே தேசத்தில் நான் சில ஆண்டுகள் தொலைபெசி நிறுவனம் ஒன்றில் ஆலோசகராக வேலை செய்ததால்;, என்னை வேட்டையாடும் நோக்கத்தோடு குரைக்;கும் கறுப்பு நிற, இரண்;டரை அடி உயரமுள்ள, ஆண் வேட்டை நாய், நிட்சயமாக “ரொடேசியன் டோபர்மன் ரிட்ஜ்பாக்” (Rhodesian Dhorman Ridgeback) என்ற உயர்சாதியைச் சேர்ந்த வேட்டை நாயாகத் தான் இருக்கும் என்பது என் அனுமானம். அதை உறுதிப்படுத்துவது போல் அதன் முதுகில் பெயருக்கு ஏற்ற, இரண்டரை அங்குலத்துக்கு, நீண்ட, அகலமான, மயிர் வரம்பானது, அதற்கு பிரத்தியேக அடையாளத்தைக் கொடுத்தது. அதனாலை தானோ என்னவோ அச்சாதி நாயுக்கு அப் பெயர் வந்திருக்கலாம். அதோடு மட்டுமல்ல என்னோடு சிம்பாப்பேயில் வேலை செய்தவர்களிடம் அச்சாதி நாயைப் பற்றி விசாரித்த போது, அச் சாதி நாய் சிங்கத்தை வேட்டையாடும் போது அவ்வூர் சோனா இன குடிமக்களால் பாவிக்கப்படும் வேட்டை நாய். அதனால் சிங்க வேட்டைக்காரன் (Lion Hunter) என்ற பெயரும் உண்டு என்றார்கள். அவர்கள் சொன்ன விளக்கம் உடனே என் நினைவுக்கு வந்தது, ஒரு வேளை எனது பெயரான ராஜசிங்கத்தில், சிங்கம் கலந்திருப்பதாலோ என்னவோ என்னை வேட்டையாட அந்த நாய் எதிர்பார்த்திருக்கலாம் என்று நினைத்தேன்.

என்னைக் கண்டு தொடர்ந்து நாய் குரைப்பதைக் கேட்டு அவ்வீட்டு எஜமாட்டி நாயின் குரலை விட தன் பெருத்த குரலில் “ சோனா, குரைக்கிறதை நிறுத்திவிட்டு கூட்டுக்குள் போ” என்றாள் ஆங்கலத்தில். நாயுக்கு ஆங்கிலம் மட்டுமே புரியுமோ என்னவோ. நாயின் பெயரைக் கேட்டவுடன்; நல்ல பொருத்தமான பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள் என நினைத்தேன். காரணம் சிம்பாப்வேயில் வாழும் இனங்களில் சோனா என்ற பெரும்பான்மை இனமும் உண்டு. அவர்கள் பந்து மொழி பேசுபவர்கள்.

பிரதான காலி வீதியில் உள்ள பஸ் தரிப்பு நிலையத்துக்குப் போகமுன் , அதற்கு அருகே உள்ள காந்தி விலாசில் கோப்பி அருந்திவிட்டு, இரண்டு வடைகளை வாங்கிக் கொண்டு, வெளியே வருவேன். அபபோது தினமும் நான் சந்திப்பது கடைக்கு முன்னால், உள்ள குப்பைத் தொட்டிக்கு அருகே, சுருண்டு படுத்திருக்கும் ஒர பெண் தெருநாய். வெள்ளையும் பிறவுனும் கலந்த நிறம். அதன் பார்வையில் ஒரு சாந்தம் தெரிந்தது. நான் சில வருடங்களுக்கு முன் ராணி என்ற பெண் நாய் ஒன்றை வீட்டில் வளர்த்தேன். எனக்கும் நாயுக்கும் பெறுத்தமில்லையோ என்னவோ இரண்டு வருடத்துக்குள் காரில் அடிபட்டு அந்நாய் இறந்து விட்டது.

நான் விவேகானந்தா வீதியில், சாந்தி நிலையத்தில், கண்ட நாயுக்குப் பெயர் இருந்தது. கொடுத்து வைத்த நாய். பாவம் இது பெயரில்லாத, அனாதையான தெருநாய். இதன் பரம்பரை, தெருநாயைச் சேர்ந்ததாக இருக்கலாம். ஆனால் தினமும் அந்நாயை காணும் போது அது குரைக்காமல் என்னைப் பார்த்து தன் வாலை ஆட்டும். ஆதனால் எனக்கு அதுமேல் பிரியம் ஏற்பட்டது. குப்பைத் தொட்டியில், காந்தி விலாசில் இருந்து வந்து விழும் சாப்பாட்டுக் கழிவுகளை நம்பி உயிர் வாழும் தெருநாய் மேல் எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. தினமம் நான் வாங்கும் இரண்டு வடைகளை அதற்கு உண்ணக் கொடுப்பேன். இந்த தெருநாயுக்கு ஒரு பெயர் வைத்தால் என்ன? என்று யோசித்த போது நான் வளர்த்த ராணியின் பெயர் என் ஞாபகம் வந்தது. பொருத்தமான பெயர். அந்தப் பெயரை வைத்தால் என்ன?. ஒவ்வொரு தினமும் வடையை கொடுத்து “ ராணி சாப்பிடு” என்பேன். காலப்போக்கில் அதற்கு நான் பெயர சொல்லிக் கூப்பிடுவது புரியத் தொடங்கி விட்டதுக்கு அடையாளமாக வடையைக் கண்டதும் இருதடவை குரைத்து நன்றி தெரிவிக்கும்.

ஒரு நாள் ராணியை சாந்தி நிலையத்தின் கேட்டருகே சோனவோடு நின்றதைக் கண்டேன. ஓகோ! பெரிய வீட்டு நாய் மேல் ராணிக்கு காதலா? “ஏய் ராணி நீ இங்கை என்ன செய்கிறாய்? கனவு காணாதே. உண்டை இடத்துக்கு ஓடிப்போ” என்ற விரட்டினேன்;.

******

மாதங்கள் உருண்டோடியது. ராணியின் வயறு பெருக்கத் தொடங்கியதை நான் அவதானித்தேன். பாவம் ராணி ஏமாற்றப்பட்டுவிட்டளா? நான் தினமும் கொடுக்கும் வடை அவளுக்கும் அவள் வயிற்றில் வளரும் ஜீவனுக்கும் போதாமல் இருக்கலாம். காந்தி விலாஸ் முதலாளியிடம் சொன்னேன,; “ ஐயா உங்கள் கடையைக் காவல் காக்கும் அந்த தெருநாயுக்கு தினமும் இரண்டு தோசைகள், என் கணக்கில் போடுங்கள். செலவை நான் தாரன்” என்றேன்.

காந்தி விலாஸ் முதலாளிக்கு என் செயல் ஆச்சரியமாகப்பட்டது.

ஒரு நாள் ஒபீசுக்குப் போக பஸ்தரிக்கும் இடத்துக்குப்போன போது ராணியை ஒரு அழகான குட்டியோடு கண்டதும் எனக்கு பெரும் மகிழ்ச்சி. ராணி தன் குட்டியை நக்கியபடி பால் கொடுத்துக் கொண்டிருந்தது. கறுப் நிறக்; குட்டியின் தோற்றத்தால் கவரப்பட்டேன். தெரு நாயுக்குப் பிறந்த குட்டியின் முதுகில் அதே மயிர் வரம்பு இருந்தது.

“அப்போ இக்குட்டியின் தந்தை உயர் சாதியைச் சேர்ந்த சோனாவா? மிருகங்களிடையே சாதிக்கு இடமில்லை போலும். இந்த சாதி, மதம், இனம், அதன் வேற்றுமையால்; நடக்கும் கொலைகள்,;; எல்லாம் மனித இனத்தில் மட்டும் தானா”? என்றது என் மனம்.

******

எழுதியவர் : பொன் குலேந்திரன் - கனடா (28-Nov-16, 12:49 am)
Tanglish : theru nay
பார்வை : 459

மேலே