அப்பாவின் சைக்கிள்

"அம்மா..... அம்மா...... எங்க இருக்கீங்க " என மித கோபமாக கத்திகொண்டே உள்ளே வந்தேன்
" என்னடா ஆச்சு" அமைதியாக வந்தாள் அம்மா

நான் வீட்டிக்கு ஒரே பிள்ளை, எனது பள்ளி படிப்பை வீட்டிற்கு அருகில் இருக்கும் அரச பாடசாலையில் படித்து இப்போது 15km தொலைவில் உள்ள கல்லூரியில் இறுதிவருட மாணவன்.
வறுமையான குடும்பம் என நான் வெளியில் சொல்லிக்கொண்டது கிடையாது. ஏதோ அப்பாவின் தேநீர் கடையால் என் குடும்ப வண்டி ஓடுகிறது. நான் கல்லூரியில் சேர்ந்த நாட்களில் என்சக மாணவர்களின் கிண்டல் கேலி பேச்சுக்களுக்கு ஆளானவன் தான் அப்போது எல்லாம் வராத கோவம் இன்று அவர்கள் என் ஏழ்மையை தொட்டபோது எல்லை மீறிவிட்டது, ஒரு மனிதனின் மானம் தீண்டி பார்க்கபடும்போது அவன் தன்னையும் மறந்து சென்றுவிடுவது இயல்புதான்.

"இனி நா காலேஜ்க்கு போறதா இருந்தா எனக்கு புது சைக்கிள் வாங்கித்தரேனும்"
"புதுசா!!! உங்க அப்பவே ஒரு பழைய வண்டிய வச்சுதான் காலத்தை ஓட்டிட்டு இருக்காரு அந்த மனுசண்ட போய் புதுசு வாங்கித்தாண்டா அவரு எங்கடா போவாரு"
"அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு புதுசு வேணும் இனிமேல் பஸ்ல எல்லாம் என்னால போக முடியாது பிரெண்ட்ஸயெல்லாம் கேலி பண்றாங்க" என்று கோபத்ததோடு அறை கதைவை அடைத்தது விட்டு உள்ளே போய் படுத்து கொண்டேன்.

தன் பஞ்சபுராணங்களை அப்பா ஒருபோதும் என்னோடு பகிர்ந்துகொண்டது இல்லை அம்மாதான் அடிக்கடி அப்பாவின் பழைய ஏடுகளை வாசிப்பாள் அப்போதெல்லாம் "அம்மா உன்ர அறுவைய்ய நிப்பாட்டுறியா" என்று முற்றுப்புள்ளி வைத்துவிடுவேன்,இப்போது என்தேவை எல்லாம் கல்லூரிபோக சைக்கிள் அதுதான் அதுமட்டும்தான்

கணநேர சிந்தனைக்கு பிறகு அப்பாடா கடைக்கு போய் விசயத்த சொல்லிட்டு வந்திருவோம்னு அம்மாடா சொல்லாமலேயே கிளம்பிவிட்டேன் அப்பாவின் கடை வீட்டில் இருந்து 2 km தொலைவில் இருந்தது, கோவமும் ஆத்திரமும் உந்த ஒருவழியா நடந்தே வந்து சேர்ந்துவிட்டேன்
" அப்பா.. அப்பா..."
"இங்கயெல்லாம் நீயேன் வாறே" எப்போதும் கேக்கும் அதேகேள்விதான், நானும் எதிர் பார்த்ததுதான்
"உங்களோட கதைக்கணும்"
"எதுவா இருந்தாலும் வீட்டுல கதைக்கலாம் போ வாரேன்"
"இல்லப்பா"
"என்ன சொல்றேன்"
தன் கஷ்டங்களை எந்த அப்பாக்களும் தம் பிள்ளைகளுக்கு காட்டியதில்லை என்னப்பாவும் அதற்கு விதிவிலக்கானவர் அல்லவே
"சரி" தற்கு மேல் ஒன்றும் கதைக்க அவர் இடம்தரவே இல்லை
"நில்லு நடந்தா வந்தே இந்தா என்ற சைக்கிளை கொண்டுபோ"
சைக்கிள்!!! அப்படிச்சொல்ல மிச்சமா அதுல இரண்டு சக்கரம் மட்டுமே இருந்தது அதும் ஆயிரம் இடங்களில் பஞ்சர் போடப்பட்டு

சரி நடந்து போறதவிட இதுல போகலாம்னு...... எடுத்து....... மிதித்து...... ஒருவழியாக வீடுவந்து சேர்ந்ததும் முடிவெடுத்துக்கொண்டேன் "வேலை கிடைச்சதும் அப்பாக்கு முதல்ல நல்ல சைக்கிள் வாங்கணும்"

உங்களுக்கும் அதிஷ்டம் இருந்தால் உங்கள் அப்பாக்களின் சைக்கிளை ஒருமுறை ஒட்டி பாருங்கள்

எழுதியவர் : இஜாஸ் (26-Nov-16, 3:10 pm)
Tanglish : appavin saikkil
பார்வை : 741

மேலே