உனக்கென்ன

ஓடும் நதிகளில் உதிரம் பாயுதே..
உன் முத்து சிரிப்பில் சிதறிய
விண்மீன்களும்..
உன் மதியழகு முகத்தையும்
மறைத்ததால்
எந்தன் மனமும் வாடுதே..
உன் அக்கினி பார்வையால்
என் உருவமும் எரிந்து
உருகுலைந்ததே..
உன்னால்
ஓடிக்கொண்டிருந்த
என் காலக் கடிகாரமும்
இன்று
ஓசை இல்லாமல் ஒடுங்கி போனதே..
உனக்கென்ன..
புன்னகை சிந்தி
பூவிதல் கொண்டு
காதல் எனும்
புதுமொழி பேசி
இறுதியில்
என்னை கவலைகளிடம்
கைதியாக்கி சென்று விட்டாய்..
காதல் கைதியாய் நானும்
வாழ்க்கை என்னும்
சிறைக்குள்
காணாமல் போன
குமரிக்கண்டம் போல்
காலாவதி ஆகிவிட்டேன்..!!
நீண்ட இடைவெளிக்கு பின்..
குட்டி..!!