காதல் தோல்வி பாடல்

ஆறாவது படிக்கையில் - அந்த
ஆராயி வந்து சேந்தா
பாடத்தை அவபடிச்சா - அவ
படத்த நான் படிச்சேன்

பச்சரிசி சாதமில்லை - அவ
பாரிஜாத பூவுமில்லை
அரும்பாத முல்ல - பாரி
எங்கிட்ட கொடுக்கத்தான்
தேரோன்னும் இல்ல

கண்ணாடி அணிந்து நான்
பின்னாடி போயிருக்கேன்
முன்னாடி போயி நின்னு
காதலதான் சொல்லலியே

காதல் சேரவில்லை - அதைக்
காலம் சேர்க்கவில்லை
என் காதல் வானவில்லை - இந்த
ஞாலம் பார்க்கவில்லை

காதல் கூடும் வேளையிலே
வேலை கூடவில்லை
வேலை தேடி வந்தவேளை
அவளுக்கோ இரண்டு பிள்ளை

கண்ணால குத்திட்டா - என்
நெஞ்சில் முள்ள
தன்னால குடிக்கின்றேன்
ஒரு மரத்துக் கள்ள

அவ காது கேக்கவில்ல
என்னோட சொல்ல
காதலோட வலிதன்னை - நான்
யார் காதில் சொல்ல

சொகத்த கொடுப்பான்னு
நெனைச்சிருருந்தேன்
இப்படி சோகத்த
கொடுப்பானு நெனைக்கலியே

எழுதியவர் : குமார் (27-Nov-16, 8:13 am)
பார்வை : 1063

மேலே