அவள் ஒருத்தி

இதயத்தின் மொழிகளையும் இலக்குகளின் திசைகளையும் அறிமுகப்படுத்தியவளே....
உடைந்த உறவுகளுக்கோ ஒத்தடமானாய் நீ ஒருத்தி'தீ'...!

அர்ப்பணத்தின் அகராதிக் கருத்தை ஆழப்படுத்திய அன்னையே..! உன்னோடு கைகுலுக்க கனவான்கள் பலர் நிற்க... காயப்பட்ட மானிடத்தை கையில் ஏந்தவே முந்தி நின்றாய் நீ.!

அன்னை திரேசாவே கருணையோ தொடர்ந்தது உன்னை நிழலாய் ... கனத்த நெஞ்சங்கள் உன் கணப் பார்வையில்...கசிந்து உருகிடுமே..!

சோகங்களுடன் வாழ்ந்தவர்களை சிரிக்க வைத்த சின்னத் தேவதை நீ!

குப்பைத் தொட்டியில் கூழங்களோடு குறுகிக் கிடந்த மழலை முத்துக்களை மண்ணைத் துடைத்து கையில் ஏந்தி நெஞ்சில் சுமந்த தங்க தாதி நீ...!

ஏழைகள் மனங்களில் நிலையாய் இருப்பவள் நீ ஒருத்தி'தீ'...
உன்னைச் சுமக்க உரிமை பெற்ற பாரத அன்னை பாக்கியசாலி தான்!!!

சி.பிருந்தா
மட்டக்களப்பு

எழுதியவர் : சி.பிருந்தா (27-Nov-16, 12:04 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : aval oruthi
பார்வை : 125

மேலே