அழியாத கோலங்கள்

மூங்கில் காட்டில் கானம் தவழ்ந்தது...
மூச்சுக் காற்றில் வானம் கலைந்தது...
மூன்றாம் பிறையில் முழுமதி வந்தது...
மூப்பில் தொடரும் இளமைக் கனவுகள்......


கண்ணில் மலர்ந்தவள் நெஞ்சில் நுழைந்தாள்...
இதயத்தின் சுவர்களில் ஓவியம் வரைந்தாள்...
விதியின் மழையில் இதயமே கரைந்தது...
விழியின் துளியில் எழுதினேன் காவியம்......


பச்சைப் பசேலென விரிந்த புல்வெளி...
அதில் படுத்துறங்கும் ஒற்றைப் பனித்துளி...
துள்ளித் திரிந்த ஆற்று மணல்வெளி...
கண்கள் ஏங்கும் சோலைக் கனவுகள்......


தத்தைப் பேசிடும் இனிய மொழிகள்...
ஒத்தையில் கூவிடும் தோப்புக் குயில்கள்...
தோகை விரித்தாடும் வண்ண மயில்கள்...
நகைத்துச் சொல்லுது நவீன காலமிது......


சிலையெனத் தேகம் அசையாது நிற்கிறது...
அலையென இந்த அகக்கடல் ஆடுகிறது...
என்றன் நினைவில் நிழல்கள் யாவும்
அழியாதக் கோலங்களாய் ஆழ்மனதில் நிறைந்துள்ளது......

எழுதியவர் : இதயம் விஜய் (28-Nov-16, 7:45 am)
Tanglish : aliyatha kolangal
பார்வை : 501

மேலே