ஏழ்மையில் பெண்மையின் பயணம்
கட்டடப் பணிக்கு சென்று வருகின்றாய்...
கண்மணியைத் தலையினில் சுமந்து வருகின்றாய்...
ஓயாது நாளும் உழைத்திடும் குணத்தில்
தேயாத மங்கை நிலவு நீதானே......
தேய்ந்துப் போனதே உந்தன் இரேகைகள்...
நூலக இளமேனி இளைத்தும் போனதே...
ஒருநாள் வேலை இல்லை யென்றாலே
ஒருவேளை சோற்றுக்கு வழியின்றிப் போகுதே......
உதிர்ந்து விழுகின்ற காய்ந்த சருகுகள்
காலாடியில் நசுங்கி நொருங்குதல் போலவே
பணத்தை சேர்த்து வைக்கும் பலரால்
பாவம் இவர்கள் வாழ்க்கை நசுங்குதே......
மெய் வருத்தும் வறுமை வந்தும்
பொய் சொல்லி பிழைக்க விரும்பாதவள்...
தனக்கு எத்துன்பம் நேர்ந்தாலும் வெளிக்காட்டாது
தன்பிள்ளை முகம் கண்டு சிரிப்பவள்......
இரவுகள் தினமும் சூழ்ந்து கொள்கிறது...வரம்தரும் இறைவனும் வேடிக்கைப் பார்க்கிறது...வசதி வேண்டுமென்று விரும்ப வில்லை...வருமானம் தினமும் கிடைக்கவே வேண்டுகிறது...........