மண்வாசம்
பல்லவி :
மழைச்சார காத்தோடு அவ வாசம் வீசுதே...
மாஞ்சோல குயிலாக மனசோரம் பேசுதே... (மழைச்சார...)
அவ உச்சந் தலையில வச்ச மல்லிகை
என் உசுருக்குள்ளே சேதி சொல்லுதே...
புது மின்னல் சிரிப்புல பத்தும் நெருப்புல
எனை மயங்கவச்சே ஆள கொல்லுதே...
என் உசுருக்குள்ளே சேதி சொல்லுதே...
எனை மயங்கவச்சே ஆள கொல்லுதே...
மழைச்சார...
சரணம் 1 :
முத்தமும் கொடுக்காம ஓடுகிற பெண்ணே...
பித்தமோ?... தலைக்கேறி சுடுதே கண்ணே... (முத்தமும்...)
சித்திரை நெலவாக மனம் தேயுதடி...
நித்திரை பொழுதோடும் ஒன்நெனப்பு பாயுதடி... (சித்திரை...)
ஏ... செவ்வந்தி பூவே...
ஏ செவ்வந்தி பூவே செம்பருத்தி தீவே...
என் நெத்திப் பொட்டின் நீர் விழுந்து
ஒன் நெஞ்சுக் கூட்டில் போர் தொடுக்காதோ?... (என்நெத்திப்...)
மழைச்சார...
சரணம் 2 :
வெத்தல கொடியாக ஆடுகிற அழகே...
கத்தாழ முள்ளெனத் தொடுதே மலரே... (வெத்தல...)
மான்விழி தூங்காது வலை வீசுதடி...
தேன்மொழி வாங்காது ஒன்மனசு பேசுதடி... (மான்விழி...)
ஏ...கொஞ்சுகிற மானே...
ஏ கொஞ்சுகிற மானே கொல்லிமலைத் தேனே...
நான் தங்கத் தட்டில் சீர் கொடுத்து
பொஞ்சாதி ஆக்கி தோள் சுமப்பேனே... (நான்தங்கத்...)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
