காத்திருக்கும் கண்கள்

காத்திருந்து காத்திருந்து பூவிழி நோகுதடா...
நெருப்புக்குள் நெஞ்சந்தான் தனியே வேகுதடா...
நீருக்குள் மூழ்கிய பந்து போலவே
நீவரும் பாதையைக் கண்கள் தேடுதடா......


கண்ணுக்கு முன்னால் உன்னுருவம் வந்து
கானல் நீராய் தோன்றி மறையுதே...
கன்னியின் மனதில் உன் நிழல்
கவிதைகள் சொல்லி இராகம் பாடுதே......


கார்கால காற்றும் அனல் வீசுது...
தார்ச்சாலை மரங்களின் பூக்கள் சருகாகுது...
பார்க்கும் விழிகளில் இளவேனில் தெரியுது...
போர்க்களமாய் என்னுள்ளம் அலை மோதுதே......


மணல்வெளியில் இருக்கும் ஒற்றைப் பனைமரமாய்
மங்கையிவள் மனமும் ஒத்தையில் வாடுகிறேன்...
முள்ளில் விழுந்த சேலைப் போல
உள்ளும் புறமும் நான் துடிக்கிறேனே......


வெயிலில் காயும் வெண்ணெய் போல
நிழலில் நின்றும் விழிகள் கசியுது...
பசியும் தூக்கமும் எனைவிட்டுப் பறந்தது
பகல் கனவில் இதயம் சுவாசிக்கிறது......

எழுதியவர் : இதயம் விஜய் (28-Nov-16, 9:00 am)
பார்வை : 233

மேலே