படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

என்னவளே சைவம் என்றாயே
பிறகு ஏன் அணிந்தாய்
பட்டு ?

மணமாவதற்கு முன்புதான்
மகிழ்ச்சி
நிரந்தரம் !

கூடி விளையாடும்
குமரிகள் கும்மாளம்
தந்தன மகிழ்வு !

ஒருத்தியை
மூவர் தாக்குவதா
செல்லாத தாக்கு !

கொள்ளை போனது உள்ளம்
கன்னியரின் கள்ளமில்லா
சிரிப்பில் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (28-Nov-16, 2:35 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 80

மேலே