உடையாத நீர்க்குமிழி - வினோதன்

பட்டுப்பாவாடை யெங்கும் நறுமணக்
காற்றோடை வீச - அப்பிஞ்சு விழிகள்
மலரென விரிந்து சிரித்து செரித்துக்
கொண்டிருந்தன - வானவில் தறித்த
கறிகோழியொத்த காற்றுக் குமிழியொன்றை !

மூச்சுத் திணறிய காற்றுக் குட்டி
றெக்கையின்றி பறந்து களிப்பை மீறி
நோவுற்ற போதும் - நோக்கத் தவறவில்லை
தனை செதுக்கமுடியா ஏக்கத்தை - உதட்டோரம்
புதைத்துவிட்டு புன்னகைக்கும் பூக்கா சடைகளை !

உழுவையும் நிலவும் உலாவும் குளமதின்
கரையோரக் கல்லில் வழலைக்கட்டி குழப்பி
குமிழியொன்றுக்கு உயிர்கொடுக்கும் படலம்
கூமுட்டை ஈன்றெடுக்க - சோர்ந்த முகம் மூழ்கி
மூச்சுவிடுகையில் எழுந்த குமிழிகள் - உடையாமல்
காத்திருந்தன - பாவையின் பார்வையில் பட்டுவிட !
காத்திருந்தன - பாவையின் பார்வையில் பட்டுவிட !

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (28-Nov-16, 4:21 pm)
பார்வை : 140

மேலே