நோட்டுக்கு வேட்டு

நோட்டுக்கு வேட்டு

நாட்டுக்குள்ள வீட்டுக்குள்ள பெட்டிக்குள்ள
காந்தியோட கணக்குலதான் கள்ளப்பணம்
கட்டுக்கட்டா தூங்க வெச்சி அழகு பாத்த
பம்மாத்து காரருக்கு பதமா வேட்டு..!

ஊரையடிச்சி ஒலையிலதான் போட்டு போட்டு
சேர்த்த பணம் அத்தனைக்கும் வந்தது வேட்டு
மாரடிச்சி அழறாங்க மறைவா நின்னு
உழைக்காம சேர்த்த பணம் உதவாதுன்னு..!

காந்தி மட்டும் சிரிச்சாரு நோட்டுக்குள்ளே
நோட்டுந்தானே சிரிக்குதிப்போ நாட்டுக்குள்ளே
பேரிச்சை கொண்டுதான் சேர்த்த பணமும்
பேரிச்சை பழத்தையும் காணல அதுவும்..!

ரோடுன்னும் பாலமின்னும் ஒப்பந்தம் போட்டு
ரொக்கமா "அடிச்சாங்க" காந்தி நோட்டு
அக்கம் பக்கம் அறியாம சேர்த்த சொத்து
அடுக்கடுக்கா எரிக்கிறாங்க நேரம் பாத்து..!

கையூட்டா வாங்கியது கை விட்டுப் போச்சு
கரன்சின்னு தொட்டதிப்போ "கரண்டும்" ஆச்சு
ஐநூறு ஆயிரமா பழகுன வாழ்வு - இப்போ
அம்பதுக்கும் நூறுக்குந்தான் அல்லாடுது..!

நோட்டுக்காக வெச்சதில்ல இந்த வேட்டு
சுரண்டல் கார பேர்வழிக்கு ஆனது ஆப்பு
பிரதமருந்தான் வெச்ச வெடி ஜோருன்னா ஜோரு
பாரதத்தை கலக்கிடிச்சி இனி விடிஞ்சிடும் பாரு..!

எழுதியவர் : சொ.சாந்தி (28-Nov-16, 9:56 pm)
பார்வை : 121

மேலே