தமிழர்களின் வீர வரலாறு

தமிழன் என்றால் படைப்பான் வரலாறு
வீரமும் அவனின் உடைவாள் பிறப்போடு !
போராடும்​ குணமோ தேரோடும் நெஞ்சில்
தன்னலம் இருந்திடா நிகரிலா இனமவன் !

அழியாத​ வரலாறும் ஆயிரம் ஆயிரமுண்டு
கலையாத நினைவில் நிலையாக இன்றும் !
நானறிந்த காலமாகக் கோரினான் தனிநாடு
நாகரீக வழியில் வாதிட்டான் இலங்கையில் !

காற்றினில் கலந்திட்ட கடைசி மூச்சுவரை
போராடித் தமிழரைக் காத்தத் தளபதியவன் !
களத்தினில்​ நின்ற கள்ளமிலா நெஞ்சமவன்
ஈழத்து​ சிங்கமவன் ஈடில்லா ​பிரபாகரன் !

நேற்றைய நிகழ்வும் ​இன்றைய​ செய்தியும்
நாளைய​ வரலாறே என்பதையும் அறிவீரே ​!
துப்பாக்கி​ குண்டு துளைத்தக் கொடுமையது
​அப்பாவித் தமிழர்கள் உயிர்விட்டத் துயரமது !

வாசித்த​ வரலாறுகள் அச்சிட்டப் புத்தகங்களில்
ஈழத்தமிழர்​ வாழ்வோ வற்றாத நினைவுகளில் !
நாம்கண்ட​ காட்சிகள் நானிலத்தில் சாட்சிகள்
அடுத்தத் தலைமுறைக்கு அழியாத வரலாறு !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (28-Nov-16, 9:43 pm)
பார்வை : 1288

மேலே