நம்மை வாழ்விக்கும் உழவர் பெருமக்கள்------------

நம்மை வாழ்விக்கும் உழவர் பெருமக்கள்

வாசுதேவன்


நேற்றைய நஞ்சை நிலங்கள்
பாலை வனம்போல் இன்று மாறியதேனோ
மண்ணையே நம்பி வாழும் உழவர் பெருமக்கள்
வானம் பொய்த்தபின் எங்கனம் உழுவது
எதை விதைப்பது என்று மனம் பேதலிக்க
மாரி மழைக்காக கூட்டம் கூட்டமாய்
மனைவி மக்கள் உற்றார் உறவினரோடு
குலதெய்வக் கோயிலுக்கு பொங்கலிட செல்கின்றனரே
காணீர்!

ஆம் மண்ணையே தாயாய்,தந்தையாய்
காக்கும் தெய்வமாய் போற்றிதுதிக்கும்
வேளாண் பெருமக்கள் மாரி அம்மா
மழை பொழிய வேண்டுமம்மா எங்கள்
நிலமெல்லாம் மீண்டும் உயிர்பெற்று
நஞ்சயாய் மாரிடவேண்டுமம்மா நாங்கள்
முன்போல் மீண்டும்
மண்ணைப் பொன்னாக்க
நெல்லும் கரும்பும் வளர்த்திட வேண்டுமம்மா
நாட்டின் பஞ்சம் போக்கி மக்கள் வயிறார உண்டு
மகிழ்ந்து எம்மையும் நினைத்திடவேண்டும்
எங்கள் மாடுகளும் நோயின்றி வாழ்ந்து
எமக்கு எம்மைதாங்கி விவசாயம் செய்திட
நீயே அருள் தர வேண்டுமம்மா முத்துமாரி
என்று உள்மனதோடு அறைக்கூவி
அங்கு இறை வணக்கம் செய்கின்றனரே காணீர்!

வேளாண் பெருமக்கள் நம்மை நம் நாட்டை
வாழவைக்க தேவனே பிறப்பித்த
தேவபெருமக்கள் அவர்கள் வேண்டுதல் பொய்க்காது
என்று நிலைப் படுத்தும் வண்ணம் வானமும்
இருண்டது எங்கும் கார்முகில் திரண்டு வந்து
பேரிடியும் கொடிமின்னலும் கூடிய பெருமழை
பொழிந்தது , மண்ணும் குளிர்ந்தது உழவர் மனமும்
வெகுவாய் குளிர்ந்தது நாளைவிவசாயதிற்கு வித்தாய்!
அன்றும் இன்றும் என்றும் உழவர் பெருமக்கள்
நாட்டின் முதுகெலும்பு ,ஆக சுழன்றும்
ஏர்ப்பின்னது உலகம் என்ற பொய்யா முனிவர்
வாக்கிற்கு ஏற்ப வாழ்க உழவர்.

மரபுக் கவிதை

நாளைய இளைஞன் ...

எழுதியவர் : (28-Nov-16, 10:30 pm)
பார்வை : 56

மேலே