இந்த ரயில்கள் யாருக்கானது இதன் அரசியல்தான் என்ன

வெள்ளைகாரன் காலத்தில் துறைமுகங்களுக்கு இடையில் தண்டவாளங்கள் போடப்பட்டன என்று நாம் படித்திருப்போம். இன்று தமிழத்தில் இயங்கும் ரயில்களும் தண்டவாளங்களும் நம்மைதான் இணைக்க போடப்படுள்ளன என்றும் நாம் நினைத்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் தான் சில ரயில்கள் ஒடும் பாதையும் அது பயணிக்கும் தண்டவாளங்கள் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தின் மக்களுக்கு தொடர்பில்லாததாக இருக்கிறது. குறிப்பாக மத்திய ரயில்வே துறை தமிழகத்திற்கான ரயில்கள் என்று அறிவித்து இருக்கும் சில ரயில்கள் தமிழர்களுக்கோ தமிழத்தில் பார்பனர் அல்லாதாருக்கோ எந்த பயனையும் கொடுக்காத பாதையாக இருப்பதை நம்மால் அறிய முடிகிறது. அதில் சில எடுத்துகாட்டாதான் இந்த சில ரயில்களை குறிப்பிட்டு காட்டுகிறோம்.

மதுரை புனலூர் 56700/Madurai-Punalur Passenger

மதுரைக்கும் புனலூருக்கும் இடையிலான இந்த ரயில் தமிழகத்தில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி என ஐந்து மாவட்டங்களைத் தாண்டி கேரளத்திற்குள் செல்கிறது மதுரையில் இருந்தோ திருநெல்வேலியில் இருந்தோ புனலூருக்கும் கொல்லத்திற்கும் செல்ல விரும்பும் யாரும் இந்த ரயிலை பயன்படுத்த முடிவதில்லை ஏனென்றால் செங்கோடையில் இருந்து 20 ருபாய் டிக்கட்டில் இவர்களால் பேருந்து வழியில் புனலூரை அடைய முடியும்.

அப்படியானால் இந்த இடைப்பட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு இந்த ரயில் எந்தவகையில் பயனளிக்கும் என்று நாம் பார்க்கவேண்டும். . நள்ளிரவில் பதினோரு பத்துக்கு மதுரையில் புறப்பட்டு பன்னிரண்டு மணிக்கு விருதுநகரையும், பனிரெண்டு இருபதுக்கு சாத்துரையும், பனிரெண்டு ஐம்பத்தி ஐந்துக்கு கோவில்பட்டியையும், அதிகாலை ஒன்னரை மணிக்கு வாஞ்சி மனியாச்சியையும் கடந்து இரண்டு நாற்பதுக்கு நெல்லைக்குவரும் இந்த ரயிலை இடைப்பட்டபகுதியில் உள்ள எந்த பயணியும் தேர்ந்தேடுக்க மாட்டார். ஏனென்றால் மக்கள் அதிகமாக பயணம் செய்யும் இந்த இடங்களில் இந்த ரயில் நள்ளிரவில் பயனப்படுவதால் அந்த ஊர் பயணிகள் இதை அவர்களது தொழில் நிமித்தமாக பயன்படுத்த முடியாது. அடுத்துவரும் நாங்குனேரியும், வள்ளியூரும், ஆரழ்வாய் மொழியும் கூட நள்ளிரவில்தான் கடந்து செல்லும்.அப்படியானால் இந்த ரயில் யாருக்காக இயக்கப்படுகிறது என்று சந்தேகம் வந்தால் அதற்கான பதில்தான் இது! ஆறு ஐந்துக்கு கேரளாவின் நெய்யாற்றங்கரைக்கு வரும் இந்த ரயில் ஆறு ஐம்பதுக்கு திருவனந்தபுரம் வழியாக 9.30க்கு கொல்லத்தை அடைகிறது. நெய்யாற்றகரைக்கும் கொல்லத்திற்கும் இடையில் உள்ள பதினெட்டு ரயில் நிலையங்கள்தான் இந்த ரயிலினால் முக்கிய பயனடையும். காலை பள்ளி கல்லூரி மாண்வர்கள், பணிக்கு செல்பவர்கள் இந்த ரயிலை பயன் படுத்துகிறார்கள். அதன் பின் பதினோரு மணிக்கு இது புனலூரை அடைகிறது. இடையில் உள்ள எட்டு நிலையங்களும் பயன்பெறுகிறது.

இது திரும்பி வருகிறபோதும் தமிழர்கள் பயன்படுத்த முடியாது.என்பது பெரும் சோகம்!

புனலூர் மதுரை 56701/Punalur – Madurai Passenger

மாலை மூன்று ஐம்பதிற்கு புனலூரில் இருந்து புறப்படும் ரயில் ஆறு மணிக்கு கொல்லத்தை அடைகிறது. இரவு எட்டு இருபத்தி ஐந்துக்கு திருவனந்தபுரத்தை கடந்து நாகர்கோவில் சந்திப்பை பத்தேமுக்காலுக்கு வந்தடையும்.பிறகு அர்த்த ராத்திரியில்தான் தமிழகத்திற்குள் பயணமாகும் பதினொன்றைக்கு வள்ளியூரையும், 12.35 க்கு நெல்லையை கடந்து சாத்தூர் 2 மணி, மதுரை 6 மணி, என இருட்டுக்குள் தமிழகத்தை கடந்து செல்லும் நாகர்கோவிலுக்கும் மதுரைக்கும் இடையில் ஓடும் ஒரே பாசஞ்சர் இது என்பதும் குறிப்பிடதக்கது. இதில் ஒரு சோகமான வேடிக்கையை பார்க்க வேண்டும். மதுரைக்கு குறைந்த செலவில் செல்ல நினைக்கும் ஏழை பயணிகள் இரவிலே ரயில் நிலையத்திற்கு வந்து காத்து கிடப்பார்கள். ஆனால் இரவு பணிரெண்டு மணிக்கு பின்தான் இந்த ரயிலுக்கு டிக்கட் நெல்லையில் வழங்கப்படும். ஏனென்றால் அப்போதுதான் ரயில் நிர்வாகத்திற்கு மறுநாள் கணக்கில் வரும். 40 ரூபாயில் மதுரைக்கு பயணிக்க நள்ளிரவில் வரிசையில் நின்றும் டிக்கட்கிடைக்காமல் ஏழை தமிழர்களை இங்கு சந்திக்கலாம் [கூட்டம் அதிகமாக இருப்பதால் நீண்ட வரிசை இருக்கும், வரிசையில் டிக்கெட் வாங்குவதற்குள் ரயில் வந்து விடும்] நெல்லை யிலிருந்து மதுரைக்கு பேருந்து கட்டனம் 110 ருபாய் பாசஞ்சர் ரயிலில் 40 ருபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி ராமேஸ்வரம் 22622/Kanyakumari – Rameswaram

தமிழகத்தின் இரு நகரங்களுக்கு இடையில் ஓடும் இந்த ரயில் முழுக்க முழுக்க தமிழர்களுக்காக விடப்பட்டது என்றுதான் நமக்கு தோணும். ஆனால் அப்படி அல்ல! இந்த ரயிலின் நேரத்தினை கூர்ந்து கவனித்தால் இதில் தமிழர்கள் எப்படி வஞ்சிக்கப்பட்டோம் என்று தெரிந்து கொள்ள முடியும்.

ராமேஸ்வரத்தில் இருந்து. 8.45 pm க்கு புறப்படும் இந்த ரயில் மதுரையை 11.40 க்கும், நெல்லையை 2.20 க்கும் கடந்து அதிகாலை 4 மணிக்கு கன்னியாகுமரியை அடைகிறது. மதுரைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையில் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நாங்குனேரி, வள்ளியூர் என பல நிறுத்தங்கள் இருந்தாலும் இது நள்ளிரவில் கடந்து செல்வதால் பயணிகள் இதனை பயன்படுத்த முடியவில்லை. அப்படிஎன்றால் இதனை யார் பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்.இதில் பயணித்து பார்த்தவர்களுக்கு தெரியும் இந்த ரயில் தமிழகத்தில் ஓடுகிறதா இல்லை வட இந்தியாவில் ஓடுகிறதா என்று சந்தேகமே நமக்கு வரும். ராமேஸ்வரம் வரும் வட இந்திய சுற்றுலா பயணிகள் கன்யாகுமரி செல்வதற்காக விடப்பட்ட ரயிலே அன்றி தமிழக மக்களுக்காக விடபட்டதுஅல்ல !.ஆனால் ரயில்வே துறையின் கணக்கில் தமிழக நகரங்களுக்காக விடப்பட்ட ரயில் என்றும் நாம் ஏமாற்றப்படுகிறோம். இந்த ரயில் பகல் நேரத்தில் இயக்கப்பட்டால் தமிழகத்தில் ஆறு மாவட்ட மக்கள் பலன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



திருநெல்வேலி – பிலாஸ்பூர் வாராந்திர அதிவேக ரயில்

திருநெல்வேலியில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் இந்த ரயில் தமிழகத்தில் இருந்து செல்லும் மிக முக்கியமான ரயிலாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இந்த ரயில் தமிழகத்திற்கான ரயிலா என்றால் இல்லை என்றுதான் பதில்வரும். திருநெல்வேலியில் இருந்து 1.15 am புறப்படும் இந்த ரயில் திருவனந்தபுரத்தை அதிகாலை 4 மணிக்கு எட்டுகிறது. இதில் பயணிக்கும் தமிழக பயணிகளைக் கேட்டால் சொல்லுவார்கள் இது திருவனந்தபுரத்திற்கும் பிலாஸ்பூர்க்கும் இடையிலான ரயில்தான் ஆனால் அங்கு நிறுத்த இடம் இல்லாமல் இங்கு நிறுத்தியுள்ளனர் என்று! ஆனால் கணக்கு மட்டும் இது தமிழக ரயில் கணக்கில் வந்துவிடும்.

திருச்செந்துர் சென்னை விரைவு ரயில்

திருச்செந்தூர் சென்னை இடையிலான ரயிலில் என்ன இருக்கிறது இது முழுவதும் நமக்கான ரயில் தான் என்று நம்மவர்கள் முழுமையாக நம்பிக்கொண்டு இருக்கிறோம். இந்த ரயில் தமிழக உழைக்கும் மக்களுக்கான ரயில் இல்லை என்பதுதான் உண்மை. இதன் நேரகாலத்தை நாம் அளவிடும் போது தெரியவருகிறது. திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செல்லும் இந்த ரயில் மற்ற ரயில்கள் வழக்கமாக செல்லும் மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக செல்லாமல் திருச்சியில் இருந்து குமபகோணம், மயிலாடுதுறை வழியாக செல்கிறது. இதில் என்ன பிரச்சனை என்று உங்களுக்கு கேள்வி வரும், இது அந்த ரயிலில் பயணித்தவர்களுக்கு குறிப்பாக பதிவுசெய்யப்பட்ட இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு தெரியவராது. திருச்செந்தூரிலும் நெல்லையிலும் இந்த ரயிலில் ஏறும் பயணிகளில் 80 சதவிதம் வரை பார்பனர்கள்தான் வருவார்கள் அவர்கள் மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு கும்பகோணத்தில் இறங்கி விடுவார்கள். அதே காலையில் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு செல்ல இருக்கும் பார்பனர்கள் ஏறிக் கொள்வார். இவர்களின் வசதிக்காக விடப்பட்ட இந்த ரயிலை நமக்கானதுதான் என்று நம்பி ஏமாந்தது நம்ம ‘அண்ணாச்சி’கள்தான். திருச்செந்தூரில் ஏறினால் தேவை இல்லாமல் பதினாறு மணி நேரம் பயணிக்க வேண்டியதுதான். மன்னை எக்ஸ்பிரஸும் மலைகோட்டையும் கூட அவர்களுக்காக விடப்பட்டதுதான். அதனை நாம் அது மாம்பலத்தில் நிற்கும் போதே புரிந்து கொள்ள வேண்டும்.

மின்சார ரயில்

கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான மின்சார ரயில் நிலையங்களில் மயிலாப்பூரில் மட்டுமே கேண்டின் இருக்கும் அந்த ரயில் பாதையில் பயனித்தவர்களுக்கு சிந்தாதிரி பேட்டைக்கும் கலங்கரை விளக்கம் ரயில் நிலையங்களுக்கும் மயிலாப்பூர் ரயில் நிலையத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள முடியும்.இப்படி ரயில் விடுவதிலும்,அது பயனிப்பதிலும்,ஏன் நிற்பதில் கூட அரசியல் இருக்கிறது.எதையும் கண்டுகொள்ளாத நாம் இதையும் கண்டு கொள்ளாமல் கடந்து விடுகிறோம்!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (30-Nov-16, 6:34 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 175

மேலே