நாடா புயல்
வா வா நாடா நீ வா
நிலத்தடி நீர்த்தனை பெருக்க வா
செடி கொடிகள் தழைக்க வா
காய்ந்திட்ட பயிர்தனை உயிர்ப்பிக்க வா
வா வா நாடா நீ வா
வா வா நாடா நீ வா
குளம் குட்டைதனை நிரப்ப வா
ஏறி நதிதனை நிரப்ப வா
எம்வீட்டு குழாய்களில் நிறைய வா
வா வா நாடா நீ வா
வா வா நாடா நீ வா
வந்த வேலை முடித்து செல்வாய்
குழாயிலும் கிணற்றிலும் வருவாய்
வீதிகளை விட்டு செல்வாய்
வா வா நாடா நீ வா
வா வா நாடா நீ வா
புயலாக வேண்டாமே
வெள்ளமாக வேண்டாமே
கரை புரள வேண்டாமே
வா வா நாடா நீ வா
வா வா நாடா நீ வா
எம்தாகத்தை போக்க வா
பூக்கள் பூக்க வா
செடிகள் காய்க்க வா
வா வா நாடா நீ வா