உடையாத நீர்க்குமிழ்
போகாதே நில்...
போதும் உன் சீரழித்தல்..
படைத்தவன் நானே அழைக்கிறேன்
என் படைப்பின் முதன்மையானவனே..
என் படைப்பை ஒவ்வொன்றாய் அழிப்பவனே
இவ்வுலக இயற்கை வளமெல்லாம்
இல்லையென ஆக்கியபின்
இங்கு என்ன இருக்கும்...?
வா வந்துவிடு நானே அழைக்கிறேன்
உன்னை இனி இங்கே விட்டால்
ஊதிப் பெரிதாக்கிய நீர்க்குமிழ் இது
உன் சித்து விளையாட்டிற்கு தாளாது
ஒரு வரையறை உண்டு
உன் விளையாடல் வரம்பின்றி போகுது
ஊழிக் காற்றாகவும் ஆழி அலையாகவும்
அழித்திடல் முடியும் என்னால் எளிதில்
இயற்கைகு தர விழைகிறேன் புதுப்பித்து
இந்த உடையாத நீர்க்குமிழியை...
--- முரளி