உடையாத நீர்குமிழ்கள்
ஊழிக் காற்றில் உலகு அழிந்திடினும்
ஆழி பொங்கி அனைத்து மூழ்கிடினும்
எழும் யாவையும் மீண்டும் புதிதாய்
எனும் நம்பிக்கையாய் உடையா நீர்குமிழ்கள்
மனிதச் சுவடேயில்லா மாபெரும் நிலப்பரப்பில்
மனம்போல் திரிந்த இயற்கைச் செல்வங்கள்
அவன் காலடி படப்பட குறுக்கு நெடுக்காய்
பாலை வனமே பார்க்கு மிடமெல்ல்லாம்
நாம் நிற்குமிடமே நினைத்துப் பாருங்கள்
முன்னர் எத்துனை பசுமை தாங்கியிருந்தன
அழிக்கப் பிறந்தோம் அழித்தே வளர்ந்தோம்
பிறர்குறியதை நம் சொந்த மாக்கினோம்
ஒரு கணம் சிந்திப் பீர்...
உடையாத தல்ல இந்த நீர்க்குமிழ்...!!
---- முரளி