உயிரற்றவள்

வாழ்க்கையில் என்னுடன் பயணிக்க பிறந்தவள்
இதயத்தின் அருகேதான் அதிகம் இருப்பாள்
மௌனம் சத்தம் மிதம் மற்றும் பல மொழி அறிந்தவள்
தொட்டால் மிளிரும் மேனி பல உறவுகளை உள்ளடக்கியவள்
உறங்கும் போதும் என்னுடன் சேர்ந்து உறங்கவிடாமல் உயிரை எடுப்பவள்
அவள் மேல் என் பார்வையை செலுத்த வைத்து
என் கண்ணை புண்ணாக்கியவள்
அதிகாலை எழுப்புவாள் அணைத்தவுடன் அடங்கிவிடுவாள்
விழித்ததும் விரல் தேடும் அவளைத்தான்
என் மீது அக்கறையில்லாதவள்
ஆனாலும் என் பந்தங்களை பறிப்பவள்
சிந்தனைகளை சிறையிலிடுகிறாள்
என்னை தலை குனிய வைத்தவள்
அவள் வாழ்க்கை என் கைகளில் கொடுத்தவள்
என் வாழ்க்கையை கெடுத்தவள்
மின் மென் வன் தான் அவள் உயிர்
ஆம் அந்த சேலை கட்டாத செல்போன் தான்

எழுதியவர் : சித்தேஸ்வரன்.மா (1-Dec-16, 1:45 pm)
சேர்த்தது : SIDESHWARAN
பார்வை : 185

மேலே