படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

விதைத்தால்தான்
கிடைக்கும்
அறுவடை !

இருக்கலாம் சேலையில் அழுக்கு
இல்லை மனதில் அழுக்கு
நாற்று நடும் பெண்கள் !

நீங்கள் குனிந்து நட்டதால்
விளைந்தது கதிர்கள்
நிமிர்ந்தது நாடு !
.
நாட்டின் முதுகெலும்பு
விவசாயம் என்றார் காந்தி
முதுகு வளைந்து நடுகிறார்கள் !

ஆடிப்பட்டம்
தேடி விதைக்க
இல்லை தண்ணீர் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (2-Dec-16, 9:37 am)
பார்வை : 67

மேலே