பூந்தென்றலே வீசு

பூந்தென்றலே வீசு....

என் பூவிதயம் பறித்த பூவே
வீசடி என்னுள் காற்றாக...
உன் மடியினில் தாங்கடி புது மலராக...

விழிப்பார்வையில் ஈர்த்த பைங்கிளியே
இதழோவியம் வரைவோம் காதலிலே...
எனை கொஞ்சிடும் உந்தன் விழிகளிலே
புது காவியம் படைப்போம் வான்வெளியினிலே....

என் மனக்கடல் பாயுது உனை அணைத்திடவே...
என் விழி இரண்டும் தேடுது உனைப்பருகிடவே..

உனை தீண்டிட நினைத்திடும் விரல்களும் சருகாய் காயுதடி...
உனை நனைத்திட துடிக்கும் இதழ்களும்
வறட்சியில் இங்கே வாடுதடி...

என் கனவினில் தினம் தினம் கொஞ்சுகிறாய்
நனவினில் ஏனடி நாடகம் ஆடுகிறாய்...
எனை தென்றலாய் தீண்டிடும் தாரகையே
என் நெஞ்சினில் உறங்கடி காலமெல்லாம்
என் கைகளில் தாங்குவேன் ஆயுளெல்லாம்.....

எழுதியவர் : அன்புடன் சகி (2-Dec-16, 11:13 am)
பார்வை : 359

மேலே