மர்ம பங்களா

ஒரே ஒரு ஊர்லே ராஜா ஒருத்தர் இருந்தாராம். என்ன ராஜா காலத்து கதைக்கு கொண்டு போய்ட்டேன்னு நினைக்கிறீங்களா? அதான் இல்லே. ராஜ வாழ்க்கை வாழ்ந்தவர்களின் ஒரு பாழடைந்த பங்களா ஒன்று இருந்தது. அந்த பங்களாவில் பல பிரச்சனைகள். முதலில் அந்த பங்களா யாருடையது என்று யாருக்கும் தெரியவில்லை. மிகவும் பழமைவாய்ந்தது. அந்த பாழடைந்த பங்களாவை சுற்றி பல மர்மங்கள் வேறு. அந்த பங்களாவுக்குள் செல்பவர்கள் உயிரோடு திரும்பியதாக வரலாறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியாக எத்தனை உயிர்கள் பறிபோனது என்று தெரியவில்லை. ஊருக்கு தெரிந்தது போன வருடம் நான்கு பள்ளிக்கூட நண்பர்கள் இரவு பாத்து மணி போல் விளையாட்டாக உள்ளே சென்று இருந்திருக்கின்றனர். சிறு பிள்ளைகள் அல்லவா, இளங்கன்று பயம் அறியாது என்பார்கள் அல்லவா அது போல் ஊர் மக்களின் பேச்சை காது கொடுத்து கேளாமல், யாருக்கும் தெரியாமல் உள்ளே சென்று இருந்திருக்கின்றனர். அந்த நால்வரில் மூன்று பேர் மயங்கிய நிலையில் பங்களா வுக்கு வெளியே வீசி எறியப்பட்டும் ஒருவன் பங்களா வுக்கு உள்ளேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தான். இந்த செய்தி கேட்ட பின் அந்த பங்களா மேல் இருந்த பயம் மேலும் ஊர் மக்களை பீதி அடைய செய்திருந்தது.

இப்படியாக மர்மங்கள் தொடர்ந்தன. அரசாங்கமும் அந்த பங்களா வின் மர்மங்களை கலைய முன் வரவில்லை. பங்களா வில் காத்து கருப்பு இருக்கு எனவும் இரவு நேரங்களில் அலைகிறது எனவும் வலை தலங்களிலும் ஊடகங்களிலும் பரவ ஆரம்பித்தது. லண்டனில் வசிக்கும் கால்வின் என்ற ஆங்கிலேயன் அதை பார்த்து விட்டு அதிர்ந்தான். பங்களா வை பற்றி ஆய்வு செய்யும் ஆவல் அவனுக்கு தூண்டியது. பங்களா வை பற்றி ஆய்வு செய்யும் விஷ பரிட்சையை எதிர்நோக்க தமிழ் நாடு சென்றான். வந்து இறங்கியும் ஊர் தலைவனை சந்தித்து தங்குவதற்கு அனுமதி பெற்றான். அவரின் மற்றொரு வீட்டிலே தங்கினான். அவன் ஊர் தலைவனிடம் வந்த காரணத்தை சொல்லவில்லை. ஊர் மக்களின் வாழ்வியல் பற்றி ஆய்வு செய்வதாக கூறி மழுப்பினான். தன்னுடைய பங்களாவின் ஆய்வுக்கு ஊர் தலைவர் உதவுவார் என்பதில் நம்பிக்கை இல்லை. ஊர் மக்களிடையே நம்ப படும் மூட நம்பிக்கைக்கு காரணம் ஊர் தலைவராக இருந்தால் தன்னுடைய ஆய்வுக்கு இடைஞ்சல் கொடுப்பர் என சந்தேகபட்டான். அன்றிரவு கால்வின் யாருக்கும் தெரியாமல் உள்ளே சென்றான். போனவன் என்ன ஆகியிருப்பான்.? வாங்க பார்ப்போம். விடிந்த பிறகு ஊர் தலைவனிடம் புகார் போனது. கொதித்து எழுந்து சென்றார். அங்கே போலீஸ்காரர்கள் மூன்று பேரை பிடித்து ஊர் மக்களின் முன்னிலையில் அடித்தார்கள். ஊர் தலைவன் வந்து நின்றார். கால்வின், அவர் முன் நின்றான். கால்வின், அவரை பார்த்து சொன்னான். உங்களின் தில்லு முள்ளு அம்பலமாகிவிட்டது. ஊர் மக்களின் பிரதிநிதி நான் என்னுடைய பங்களாவில் நான் எதுக்காக தில்லு முள்ளு ஆட வேண்டும் என்றார்.

அடுத்த நிமிடம் கால்வின், சார் அது எனக்கு சொந்தமான பங்களா. ஊர் தலைவர் அதிர்ச்சிக்குள்ளானார். என்ன ஒரு ஆங்கிலேயன் பாழடைந்த பங்களாவுக்கு சொந்தம் கொண்டாடுவதா? இதை நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். உடனே போலீஸ்காரர் அவர் சொல்வது உண்மைதான். இந்த பங்களா பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயர்கள் கட்டியது. அதாவது கால்வினின் பாட்டன் கட்டியது. கால்வினின் பாட்டன் தமிழ் நாடு வந்தால் அங்கே தான் தங்குவார். அது மட்டும் இல்லாமல் அவர் பிரிட்டிஷ் காலத்தில் மாவட்ட கலெக்டர்ராக இருந்துவந்துள்ளார். அதற்கு ஆதாரமாக நில பட்டா பத்திரம் கால்வினிடம் உள்ளது பாருங்கள். அவருடைய பங்களாவை பற்றி வதந்தி பரவியதால் உண்மையை கண்டறிய பல வருடங்கள் கழித்து இங்கே வந்துள்ளார் கால்வின், வந்த சில நாட்களிலே என்னிடம் எல்லா தகவலையும் சொல்லி பங்களாவுக்குள் என்ன நடக்கிறது என்று பார்க்கவும் சோதனை இடவும் ஐயம் கொண்டோம். ஆனால் இதற்கு முன்னாள் ஏற்கனவே அந்த பங்களாவுக்குள் நுழைந்த நான்கு பள்ளிக்கூட நண்பர்களில் ஒருத்தனை சந்தித்து விசாரித்தோம். அந்த பையனும் இப்போ இங்கே வந்துள்ளான். சொல்லுங்க ஊர் தலைவர் அவர்களே, இனிமேல் நீங்கள்தான் சொல்ல வேண்டும். ஏன் இந்த காத்து கருப்பு நாடகமெல்லாம்.

சொல்றேன் என்று வேறு வழி இன்றி சொல்ல ஆரம்பித்தார். என் குடும்பம் தலைமுறை தலைமுறையாக சொத்து பத்து ஏதும் இல்லாமல் அல்லோல பட்டு வாழ்ந்து வந்தோம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலே என் தாத்தா ஆங்கிலேயனால் துன் புறுத்த பட்டு வாழ வழி இன்றி உடுத்த உடை இன்றி இருந்து மாண்டனர். நானும் அப்படியே இருந்து விட கூடாது என்பதற்காக பல வேலைகள் செய்து வந்தேன். அதுவும் என் ஆடம்பர ஆசைக்கு போதவில்லை. ஆகவே நகை பணம் ஆபரணங்கள் டைமோண்ட் போன்ற விலை உயர்ந்த பொருட்களை கூலிக்கு ஆள் வைத்து கொள்ளை அடித்தேன். அடித்த பொருட்களை பத்திரமாக வைக்கவும் கூலி ஆள்கள் வசிக்க ஒரு பங்களாவை தேவை பட்டது. அதான் பாழடைந்த இந்த பங்களாவை சுத்தி வளைத்து போட்டு விட்டேன். ஊர் மக்கள் நான் சொல்வதை நம்புவதற்காக ஊர் தலைவர் பொறுப்பையும் ஏற்று கொண்டு விட்டேன். யாருக்கும் கடத்தல் வேலை நடப்பது தெரிய கூடாது என்பதற்காக பங்களாவுக்குள் பேய் பிசாசு, காத்து கருப்பு நடமாட்டம் இருக்கிறது என்று ஒரு வதந்தியை தட்டி விட்டேன். ஊர் மக்கள் உள்ளே நுழையாமல் இருக்க பயத்தை ஏட்படுத்தினேன். அதையும் மீறி பள்ளிக்கூட நண்பர்கள் நால்வர் உள்ளே நுழைந்து நடப்பதை அனைத்தையும் அதி ஒருவன் பார்த்து விட்டான். அவனை மர்மமான முறையில் அடித்து கொன்று விட்டு மற்ற மூவரையும் பேய் செய்ததை போல பயமுறுத்தி ஊரை விட்டே குடும்பத்தோடு ஓட செய்தேன்.

கால்வின் இதை எல்லாம் கேட்டு விட்டு ஊர் மக்களிடம் இனிமேலாவது மூட நம்பிக்கைகளை நம்பாமல் புத்திசாலித்தனமாக இருங்கள். ஏதாவது யாரவது சொன்னால் அது உண்மைதானா என்று ஆராயுங்கள், உடனே நம்பி விடாதீர்கள். என் முன்னோர்கள் கட்டிய இந்த பங்களாவை ஊர் மக்களுக்காக பயன் பட பாலர் பள்ளியாக உபயோக படுத்த அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கிறேன் என்றான் கால்வின். ஆங்கிலேயர்கள் சுதந்திரம் தந்தது என்னவோ உண்மைதான். இப்பொழுது எதிரியாகவும் அடிமையாகவும் ஆக்குவதெல்லாம் சொந்த மண்ணில் பிறந்தவர்களே. இதற்கு எப்போது சுதந்திரம் வரும்.

எழுதியவர் : பவநி (2-Dec-16, 2:27 pm)
Tanglish : marma pangalaa
பார்வை : 445

மேலே