தாம் உண்மையாக இருக்கோமா

ஒரு கடை தெருவில். ஒரு சீனி கடை காரர் மற்றும் ஒரு பால்கோவா கடை காரர் இருந்தார்கள் . இரண்டு கடையும் எதிர் எதிராக அமைந்திருந்தது . பால்கோவா வியாபாரி சீனி கடை காரரிடம் பால்கோ செய்வதட்காக சீனி வாங்கிக்கொள்வார் ,இதேபோல் சீனி கடை காரர் பால்கோவா வியாபாரிடம் பால்கோவா வாங்கிக்கொள்வர் .இவ்வாறாக இரண்டு பெரும் மாறி மாறி வாங்கிக்கொள்வார்கள் . ஒருநாள் பால்கோவா கடை காரர் ஒரு கிலோ சீனி வாங்கி வந்தார் அனால் சீனி குறைவாக தெரிந்தது. அவர் எடை வைத்து பார்க்கையில் 900 கிரமாக இருந்தது இதை அவர் பெரிதாக எண்ணவில்லை . மறுநாளும் சீனி வாங்கியபோது 850 கிரமாக குறைவாக இருந்தது. இவ்வாறாக நாளுக்கு நாள் சீனி எடை குறைந்து கொண்டே போனது எனவே ஆத்திரம் அடைந்த பால்கோவா வியாபாரி என்ன இவன் எல்லாரையும் ஏமாற்றுகிறானெய் இவானா சும்மா விடக்கூடாது என்று எண்ணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான் . இந்த புகார் நீதி மன்றம் வரைசென்றது ,சீனி வியாபாரிடம் , நீதி மன்றம் பால்கோவா வியாபாரி சொன்னது எல்லாம் உண்மையா என்றது விசாரித்தது ,இதட்கு சீனி வியாபாரி அவர்சொல்வதெல்லாம் உண்மைதான் ,இவர் என்னிடம் வழக்கமாக 1 கிலோ சீனி வாங்குவார் ,அதை போல் நான் வழக்கமாக அவரிடம் 1 கிலோ பால்கோவா வாங்குவேன் ,ஒரு நாள் எனது 1 கிலோ எடை கல்லை காணவில்லை எனவே தினமும் அவரிடம் வாங்கிய பால்கோவா வைத்துதான் எடை போட்டு தருவேன் என்று சொன்னார் .............இதன் மூலம் தாம் உண்மையாக இருக்கோமா பிறரை சொல்ல ...........

எழுதியவர் : செல்வ பாண்டி ஜெ (1-Dec-16, 8:17 pm)
சேர்த்தது : செல்வ பாண்டி ஜெ
பார்வை : 523

மேலே