பன்றி மூச்சி வாயா

மிதமான மழை சாலையோரத்தில் ஒரு பன்றி அடிபட்டு கிடந்தது .. சாலையில் செல்லும் அனைத்து வாகனமும் மின்னல் வேகத்தில் பறந்தன உயிரின் அலறலை கேட்க நேரமில்லாமல் .. சிறிது நேரத்தில் அந்த பன்றி இறந்துவிட்டது .. இரண்டு மணி நேரம் கழித்து ஒரு குடியானவன் பன்றியின் காலை பிடித்து இழுத்து சாலையின் முள்புதரில் வீசி சென்றான் ..

நேற்று அதே சாலையில் ஒரு மனிதன் அடிபட்டு கிடந்தான் .. எல்லோரும் சுற்றி அவனை பார்த்து எப்படி நடந்தது என்று விசாரிக்க நான் சாலை ஓரமாக வந்துகொண்டிருந்தேன் அப்போது பன்றி குறுக்கே வந்துவிட்டது அதில் தடுமாறி கீழே விழுந்துவிட்டேன் என்றான் .. இந்த பண்ணிங்க தொல்லை பெரும் தொல்லையா இருக்கு .. கார்ப்பரேஷன்காரங்க என்ன பண்ணுறாங்க என்று புலம்பியபடியே விசாரித்தவர் நடையை காட்டினார் ..அப்பொழுது குறுக்கே வந்ததாக சொல்லப்படும் பன்றி கால் முறிந்து அதன் தரப்பு விளக்கம் எதுவும் தராமல் முள் புதரில் ஓடி மறைய தொடங்கியது ..!

எழுதியவர் : அருண்வாலி (1-Dec-16, 12:38 pm)
சேர்த்தது : அருண்ராஜ்
பார்வை : 316

மேலே