நாக்கு நீ
யாரு பாட்டிம்மா நாக்கு நீ?
#$@
அடியே செல்லம்மா, ஏழு வருசத்துக்கு முன்னாடி வங்கி அதிகாரி வேல கெடச்சு வடக்க பீக்காருக்கு (பீகார்) போனானே எங் கடசி மவன் கண்ணப்பன் அவன்தா இப்ப குடும்பத்தோட என்னப் பாக்க வந்திருக்கறான். அவம் பொண்ணு பேருதான் நாக்கு நீ.
@@#
என்னங்க பாட்டிம்மா ஒரு பொண்ணுக்கு நாக்கு நீ _ன்னா பேருவைக்கிறது?
@@@@
நானும் அதத்தாண்டி செல்லம்மா அவங்கிட்ட கேட்டன். அதுக்கு "அம்மா நா எங்க பாப்பாவுக்கு செல்வின்னுதாம் பேரு வச்சேன். நாங்க குடியிருக்கற பகுதிலே நாகாத்தம்மன் கோயில் இருக்குது. கலருசுங்கற டிவில ஒரு தொடர்ல ஒரு பொண்ணு திடீர் திடீர்னு பாம்பா மாறுவா, அப்பறம் மறுபடியும் பொண்ணா மாறுவா. அந்த தொடரப் பாத்ததுக்கு அப்பறந்தாம்மா நா நாகத்தம்மாவின் தீவிர பக்தன் ஆகிட்டேன். உஞ் செல்லப் பேத்தியோட செல்விங்கற பேர மாத்தி அந்தப் பாம்புத் தொடர் பேரையே பாப்பாவுக்கு வச்சுட்டேன். அந்தத் தொடரோட மொழிபெயர்ப்பான நாக்குநீ-யத்தாம்மா இப்ப நீங்க சன்னு டிவில பாத்திட்டு இருந்தீங்க" -ன்னு சொன்னாண்டி.
@@@@@
ஆமாம் பாட்டிம்மா, இப்ப சன் டிவில ஒளிபரப்பாகிட்டு இருக்கற நாகினி-யத்தான் உங்க மகன் சொல்லிருப்பாரு.
@@@@@
ஆமாண்டிச் செல்லம் அந்த நாக்குநீ-தான் அவஞ் சொன்னா.