மாம்பழம்
ஒரு ஊர்ல கணவன் மனைவி சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் வீட்டில்
ஒரு மாமரம் இருந்தது. அதற்கு சரியாக உரம் போடாததால் அது பூ பூத்து பழம்
அழுகி கீழ விழுந்து விடும்.
அவளுக்கு அதில் உள்ள பழத்தை சாப்பிட வேண்டும்
என்று ஆசை உடனே தன் கணவரிடம் அடுத்த சீசனில் நல்ல உரம் வாங்கி போடுங்கள்
என்றால். அவனுக்கும் எல்லா கணவரும் போல சரி என்று சொல்லி விட்டு பிறகு அப்படியே
மறந்து விட்டான். அந்த சீசனும் அப்படியே போய்விட்டது.
அவளும் அடுத்த சீசனுக்காவதுஉரம் வாங்கி போடுங்கள் என்றால்.
மறுபடியும் அப்படியே மறந்து போய்ட்டான். மறுபடியும் அதே போல் பழம்
அழுகி போய்விட்டது. அவளும் கோபம் அடைந்து உடனேஅவனை கையோடு கடைக்கு
கூட்டிட்டு போய்ட்டாள்.அவனும் நீ போய் தேவையானதைவாங்கிட்டு இரு நான் பக்கத்துல
போய் விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லிட்டு போய் விட்டான்
அவன் ஒரு பழக்கடைக்கு போய் இரண்டு கூடை நிறைய மாம்பழம் வாங்கிவிட்டு
வீட்டுக்கு போய் எல்லா மாம்பழத்தையும் நூலில் கட்டி மரத்தில் தொங்க விட்டான்.பிறகு
அவளை கூப்பிட கடைக்கு போனான். அவளுக்கு கடைக்கு போன உடன் தான் வாங்க வந்த
உரத்தை தவிர தனக்கு பிடித்த அனைத்தையும் வாங்கிவிட்டால்.
பிறகு தன் கணவருடன் வீட்டுக்கு வந்தால். மரம் முழுவதும் மாம்பழமாக இருந்தது.
அதை கண்ட உடன் அவள் ஆச்சரியத்துடன் நின்றாள். தன் கணவரிடம் எப்படிங்க
அதுக்குள்ள இவ்வளவு பழம் என்றால்.
அதற்கு அவன் நீ உனக்கு பிடித்த மாம்பழம் வேணும்தானே ஆசைப்பட்ட அதனால்
தான் நான் மாம்பழத்தை கட்டி தொங்க விட்டுருக்கேன் ஆனால் உரம் போட்டாள் இரண்டு
வருஷம் நல்ல பழத்தை கொடுத்துவிட்டு பிறகு அந்த மண்ணில் உள்ள இயற்கையான சத்து
கூட அழிந்து போய்விடும் என்றான்.
ஆசையே அழிவிற்கு காரணம்...