தெய்வ பக்தி இருந்தால் மட்டும் போதாது

ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார் , அவனுக்கு செல்வம் என்கிற ஒரு நண்பனும் இருந்தான் , ராஜாவுக்கு தெய்வ பக்தி அதிகமாக இருந்த்தது ,எல்லா தெய்வங்களையும் வணங்குவான் ,என்ன காரியம் என்றாலும் தெய்வம் தான் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தெய்வத்திடம் எல்லாத்தயும் ஒப்படைத்து விடுவான், இவ்வாறு இருந்த ராஜாவை திருத்த வேண்டும் என்று செல்வம் எண்ணி ராஜாவின் கோட்டையே விட்டு வெளியே சென்றான் , செல்வம் சென்று ஒரு வாரம் ஆனது ,அனால் ராஜாவுக்கு அவர் நண்பர் செல்வம் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை,
;
ராஜாவின் நண்பர் செல்வம் இரண்டு மாதங்களாக ராஜாவுக்கு தெரியாமல் கோவில் ஓன்று கட்டினான் ,ஆனால் கோவில் சன்னதியில் சாமி சிலை வைக்காமல் சன்னதியின் நான்கு தூணை சுற்றி சிவப்பு துணியால் சுற்றி வைத்தான் ,இந்த சிலை இல்லாத கோவிலுக்கு திரை மூடிய தெய்வம் என்று பேரும் வைத்தான் , இந்த கோவிலை பார்த்த மக்கள் சாமியே வணங்க வந்தனர் , நான்கு தூணில் கட்டப்பட்ட துணியே சுற்றி மக்கள் தங்கள் குறையே வேண்டினார்கள் , மக்களின் குறைகள் நீங்கியது ,எல்லாம் இந்த திரை மூடிய தெய்வத்தின் அருளால்தான் என்று மக்கள் அங்காங்கே பேசிக்கொண்டனர் ,எனவே மக்கள் அந்த கோவிலுக்கு கூட்டம்கூட்டமாக சென்றனர் , பின்பு கோவில் முழுவதும் அதிக கூட்டமாக இருந்தது ,
;
ஒருநாள் ராஜாவின் நாட்டை போர் தொடுக்க பக்கத்து நாட்டு ராஜா ஓலை அனுப்பினார் , இதை கேட்ட ராஜா மிக கவலையாக இருந்தார் , பின்பு ராஜாவின் நண்பர் செல்வமும் வந்துவிட்டார் , எங்கு சென்றாய் என்று ராஜா கேட்டார் , அதட்கு செல்வம் உண்மையே மறைத்து தனது அம்மாவே பார்க்க சென்றதாகக்கூறினர், ராஜா செல்வத்திடம் பக்கத்து நாட்டு ராஜா போர் தொடுக்க ஓலை அனுப்பினார் என்று சொன்னான் , ராஜாவின் கோட்டையில் உள்ள ஒருவன் ராஜாவிடம் ராஜா ராஜா ஒரு ஊரில் திரை மூடிய தெய்வம் இருக்காம் அது மிக சக்தி வாய்ந்த தெய்வமாம் ,மக்கள் அனய்வரும் அங்குதான் அதிகமாக வணங்குகிறார்கள் , அந்த தெய்வம் கேட்டது எல்லாம் கொடுக்குதாம் என்றான் ,ஆனால் அந்த கோவிலை காட்டியதே ,ராஜாவின் நண்பர் செல்வம்தான் என்பது தெரியாது ,
;
ஒருவன் வேகமாக ராஜாவிடம் ஒடி வந்து ராஜா ராஜா பக்கத்துக்கு நாட்டு ராஜா போர் வீரர்களுடன் வந்து நமது படை வீரர்களை சண்டை இடுகின்றனர் என்றான் , உடனே ராஜா,,,, மேலும் அதிக போர்விரர்களை அனுப்பி நீங்கள் அனைவரும் அவனெய் எதிர்த்து போரிடுங்கள் , நானும் செல்வமும் போய் அந்த திரை மூடிய தெய்வத்திடம் போய் நம் படை வீரர்கள் வென்று வரவேண்டும் என்று வேண்டுகிறோம் என்று அனுப்பி விட்டான் , பின்பு அந்த இரண்டுபேரும் கோவிலுக்கு சென்றனர் , அனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது , இதை பார்த்த ராஜா இவ்வளவு சக்தி வாய்ந்த தெய்வமா என்று வியந்தார் , ராஜா என்பதால் மக்கள் அனைவரும் ராஜாவுக்கு வழிவிட்டனர், ராஜா கோவிலுக்குள் சென்று அந்த திரை மூடிய தெய்வத்திடம் எங்களது போர் வீரர்கள் அனைவரும் போருக்கு சென்றுள்ளனர் அவர்கள் எதிர் படையினரை வென்று வர நீதான் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வேண்டிவிட்டு கோவிலை விட்டு வெளியே வந்தார் , ஒருவன் வேகமாக ஓடி வந்து ராஜா ராஜா நாம் போரில் வென்று விட்டோம் நமது போர் வீரர்களுக்கு எந்த காயமும் ஏட்படவில்லை என்றான் , இதை கேட்ட ராஜா மிகவும் மகிழ்ச்சியாக பார்த்தாயா செல்வம் இப்பதான் இந்த தெய்வத்திடம் வேண்டினோம், கோவிலை விட்டு வெளியே வந்த உடனேயே போரில் ஜெயித்து விட்டோம், பார்த்தாயா தெய்வத்தின் சக்தியே என்றான் ராஜா , இதட்கு அவனது நண்பன் செல்வம் இந்த கோவிலை நான்தான் காட்டினேன் ,இந்த கோவிலுக்கு நான் எந்த சிலையும் வைக்கவில்லை, நான்கு தூணை சுற்றி சிவப்பு துணியால் காட்டினேன் , நம் வீரர்கள் வென்றது சாமியின் அருளால் இல்லை , நமது படைகளின் வீரம்தான் என்றான் , இதன் மூலம் ராஜாவுக்கு செல்வம் எல்லா விஷயங்களையும் தெய்வம் தான் செய்ய வேண்டும் என்று எண்ணாமல் தாமும் செய்ய வேண்டும்..
;
;
;
நன்றி!!!

எழுதியவர் : செல்வ பண்டி ஜே (2-Dec-16, 9:49 pm)
சேர்த்தது : செல்வ பாண்டி ஜெ
பார்வை : 365

மேலே