அவளின் கூந்தல்

பெண்ணே
கருங்கடல் அலையென
காட்சியளிக்கும் உனது
கருநிற கூந்தலைக் கண்டு
எத்தனையோ இளைஞர்கள்
கண்விழிக்க முடியாமல்
கனவுகளில் மூழ்கி கிடக்கின்றனர்
தெரியுமா?!,

அன்பே
நீ என்ன பொதிகை மலையில்
நீராடினாயா?! இல்லை
பூ மழையில் நீராடினாயா?!
எதற்காக உன் கூந்தல்
இத்தனை வாசம் வீசுகின்றது?!!,

இடைவரை இடைவிடாமல்
நீண்டு இருக்கும் உன்
நீளமான கூந்தலை கண்டு
இன்னும் நீளுதடி
எத்தனையே எண்ணங்கள்
என்னவளே உன்னை
வர்ணிக்க!!!,

நிலவை மறைக்கும் மேகமாக
உன் மெல்லிய தேகத்தை
மறைக்கும் மயிரிழையும்
எத்தனை அழகடி?!!!

உலர்ந்த உன் கூந்தளில்
உதிரும் நீரில் தோற்றுபோனதடி
ஆயிரம் ஆடவரின் தலைக்கனம்!!!!,

உன் கூந்தளில் குடியேர
கோடி பூக்கள் பூர்த்து
உதிருதடி இந்த பூமியில்!!!!,

அழகே
வர்ணனே கண்டு வியக்கும்
கார்மேகமடி உன் கருங்கூந்தல்!!!!!,

என்னுள் உன் கூந்தல்
நிறம் இல்லையென
உன் கூந்தல் கண்டு
வானவில்லும் வருந்துமடி!!!!

அழகிய மயில் தோகையினை
அசையாமல் அமைத்த அழகடி
அழகே
உன் அழகிய கூந்தல்!!!!!!!,

மயிரிழையில் உயிரினை
பரிக்கும் விந்தையடி
மங்கையே மணம் வீசும்
உன் கூந்தல்.................
.........................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (2-Dec-16, 3:45 pm)
Tanglish : avalin koonthal
பார்வை : 12876

மேலே