வழிப்போக்கன் 2 -காடன்-

மழை மாலை வேளை
தெரு நனைந்து கொண்டிருந்தது
தண்ணீர் துறவிகளின் தவம்
வீதிதோறும்
மழைபோலில்லை எவர்க்கும்
ஈரம்
***
இன்றலர்ந்த பெருமழை
"நடா"வின் இயல்புதான்
எனினும்
தெரு வாசிகளின் முகத்தில்
நாசகால பீதி
***
குடைகளாய்க் காற்றாடி
நனைந்து நடந்தோம் நானும்
மனப்பிறழ்வாளனும்
அவன் பழைய கந்தல் குடை
நான் புதிய கந்தல் குடை
***
சாக்குப் பை போர்த்தி
சிறுநீர் கழிக்கும் சிறுவன்
கருங்குருவி ஒன்றின் ஓங்குகுரல்
நனைந்தொழுக நடக்கும்
மாட்டின் மணியோசை
சோவென மழையின் இசைமையும்
***
சாலையோரச் சிறுகுடிலில்
கூடைமுடையும்
வயோதிகத் தம்பதியரின்
"மும்மூரம்"
பெய்யும் மழையினிடத்தும்
***
வெகுநாட்களுக்குப் பிறகு
கொண்டாடும்
மரங்களின் விமரிசையான
விழா இது
முன்புபோல் மரத்திரள் இல்லை
***
-தமிழ்க்காடன்-

எழுதியவர் : தமிழ்க்காடன் (2-Dec-16, 4:24 pm)
சேர்த்தது : சுஜய் ரகு
பார்வை : 85

மேலே