சின்னவளே கவலை விடு

சின்னவளே கவலை விடு ......................
மண்ணை வெறித்து பாக்கிறாள்
மறத்தமிழ் மகள் ஒருத்தி
மண்டி இட்டு தேடுகிறாள்
மறவரே எழுந்து வாருமே
சின்னவள் அழுகை கேட்குதோ
உந்தனின் கல்லறை தேடியே
அவள் கன்னத்தை துடைத்து நீருமே
அழுவதை நிறுத்திட வருமே
என்னதான் இருந்தாலும் உம்மை
எண்ணிட மனம் விரும்புதே
கண்ணெதிரே வந்து தோன்ருவீரோ
கண்மணி மனம் மகிழதானோ
என்னடா வாழ்க்கை இது
என்று ஏங்கிய நாளை கண்டு
உம்மையே பார்த்த பின்பு
உள்ளமே உருகுது இன்று
சின்னவளே கவலை விடு ...........

எழுதியவர் : பிரியன் (2-Dec-16, 7:25 pm)
பார்வை : 91

மேலே