காதல் வலி
கல்லாய் நீ பேசும் சொல்லெல்லாம் முல்லாய் நெஞ்சை குத்துதடீ..!!
இதயம் தன்னில் குருதி வடிக்குதடீ..!!
நோய் வா.... நோய் வா..... என்று உள்மனம் வேண்டுதடீ., நீ உன் மடி சாய்த்து கூறும் சிறு அரவணைப்பு வேண்டி..!!
காத்திருப்பேன் கடைசி வரை....
ஆனால், மனதில் கொள்..... மொத்தமும் பலன்ற்றுப் போகும்., நீ என் வெற்றுடலை கட்டியணைத்து எத்தனை முத்தம் பதித்தாலும்....
அன்றும் என் மனதிலுள்ள மொத்த ஆசையும் காதலும் உன் மடி தேடியே சுற்றி திரியும்., அன்புள்ள ஆன்மாவாய்...!!
வாழும் வாழ்க்கை என்றும் அர்த்தமுள்ளதாய் இருக்க வேண்டும்... என் வாழ்வின் மொத்த அர்த்தமும் என் அன்பு தேவதை நீ மட்டுமே...!!