செல்லா காசு

பக்கத்து விட்டு பங்கஜமும் அடுத்த வீட்டு பார்வதியும் நாளைக்கு எந்த வங்கிக்கு போக வேண்டும் என்பதை ஒரு நாளைக்கு முன்பே பேசி கொண்டனர்..மூன்று நாளாய் அலைந்து கையில் உள்ள ருபாய் 2000 த்தை மாற்ற முடியாமல் தவிக்கின்றனர்..
அன்று காலை கதிரவன் உதிப்பதற்கு முன்பே அந்த வங்கியில் வரிசையில் நிற்க செல்கின்றன... பாரத பிரதமரை மீண்டும் ஒரு முறை மனதில் திட்டி கொண்டு அந்த வங்கிக்கு நோக்கி சென்றனர். இவர்களுக்கு முனபே அங்கே ஒரு கூட்டம் வரிசையில் காத்திருக்கிறது அதற்கு பின்னாள் இருவரும் நின்று கொண்டனர்..
அந்த கூட்டத்தில் 75 வயது பெரியவரும் நின்று கொண்டு இருக்கிறார்... தனக்கு பின்னால் வந்த அந்த பெரியவரை பாவம் தன் அப்பா வயது இருக்கும் என நினைத்து அந்த பெரியவரை அழைத்து தனக்கு முன்னால் நிறுத்தி கொண்டாள் பார்வதி..
அந்த வரிசையில் நின்று கொண்டு இருந்த அதிகம் பேர் பிரதமரை திட்டி கொண்டுத்தான் அங்கே நின்று கொண்டு இருந்தனர்...இடைஇடையே காக்கி சட்டை போட்ட காவல் துறை வரிசையை சரி செய்து கொண்டு இருக்கின்றது...இந்த கூட்ட நெரிசலில் கை குழநதை உடன் சில பெண்கள். குழந்தைக்கு புட்டி பாலுடனும் தண்ணீர் பாட்டிலுடனும்..பாம்பர்ஸ் டவல் போன்ற எல்லா தேவைகளுடனும் அங்கே நின்று கொண்டு இருந்தனர்..
பார்க்கவே பாவமாகத்தான் இருக்கிறது...இங்கு மட்டும் இல்லை நாடே இப்படித்தான் சித்திரவதை அனுபவித்து கொண்டு இருக்கிறது...உழைத்து சம்பாரித்த காசை கூட வரிசையில் காத்திருந்து மாற்ற கூடிய சூழ்நிலை.
தெருவுல போற சனியனை கை தட்டி அழைத்தது போல் இருக்கிறது. இப்படி மணிக்கணக்கா காத்திருந்தாலும் கடைசி நேரத்துல பணம் முடிந்து விட்டது டோக்கன் தருகிறோம் நாளை வந்து மறுபடியும் வரிசையில் நில்லுக்கள் வங்கி அதிகாரியின் குரல் பாவம் காத்திருந்தவர்கெல்லாம் ஏமாற்றம்..
அதில் ஒரு அம்மா....
ஐயா எனக்கு புள்ளகுட்டி இல்ல எம் புருஷன் விவசாயத்துறையில பணி புரிந்து ஓய்வு பெற்று வீட்டுல இருக்காரு.எங்களுக்கு உதவிக்கு யாரும் இல்ல நாலு நாளா நானும் இந்த வரிசையில் நின்னட்டுதான் பேரேன் எம் புருஷன் ஒரு ஹார்ட் பேஷண்ட் அவர் தினம் போட்டுக்குற மாத்திரை முடிச்சு போச்சு மாத்திரை வாங்க கூட பணம் இல்ல இன்னைக்கும் நான் மாத்திரை இல்லாம வீட்டுக்கு போன நான் நாளைக்கே என் தாலிய அறுக்க வேண்டிய நிலைதான் ஏற்படும் சார்..என தன் முந்தானைய விரித்து அந்த கூட்டத்தில் இருந்தவரிடம் பிச்சை கேட்டாக ஆரபித்து விட்டார். அந்த வரிசையில் நின்றவர்கள் ஆளுக்கு 10 20 என கொடுத்து அந்த ஹார்ட் நோயாளிக்கு மாத்திரை வாங்கி கொடுத்தனர்...கையில் பணம் இருந்தும் பிச்சை எடுக்க கூடிய தன் நிலையை நினைத்து கண்கலக்கியவரே அங்கிருந்து புறப்பட்டார் அந்த அம்மையார்....

மூன்று நாட்களாய் மாத்திரை சாப்பிடாமல் தவித்த தன் கணவனுக்கு அவசரமாய் அந்த மாத்திரை எடுத்து கொண்டு வேகமாய் நடந்த அவர் வீட்டை அடைகிறார்...
வீட்டில் தனிமையில் இருந்த தன் கணவர் காலம் சென்று விட்டார்..இதை தெரியாமல்..
ஏங்க மாத்திரை வாங்கிட்டு வந்துட்டேன்...என்று குரல் கொடுத்தவாறு தன் கணவனை கூப்பிட்டார்...
எந்த அசைவும் இல்லாததை கண்டு அருகில் சென்று கணவனின் தோலை பகுதியை தொட்டார்...அப்போதும் எந்த அசைவும் இல்லை...
பக்கத்து விட்டு முருகனை குரல் கொடுத்து கூப்பிட்டார்...
என்னம்மா என்று வேகமாக வந்த முருகன் அவரை தொட்டு லேசா அசைத்தான்...ஒன்றும் பிடிபடவில்லை.
108க்கு போன் செய்தான்..108 தொலைபேசி இயங்கவில்லை..வேறு எந்த தொடர்பு எண்ணும் தெரியல
உடனே அருகில் உள்ள மருத்துவரை வீட்டுக்கு அழைத்து வந்து பார்த்ததில் இறந்து போய் மூணு மணி நேரமாச்சு..
கத்துகிறாள் கதறுகிறாள்..மாண்டவன் மீண்டு வந்ததாக சரித்திரம் இல்ல..
அக்கம் பக்கத்தினர் எத்தனையோ பேர் ஆறுதல் சொல்லி கூட அந்த அம்மாவை ஆறுதல் படுத்த முடியவில்லை...உறவுகள் எல்லாம் ஒன்று கூடினர்..
சாவு எடுக்க உறவுகள் ஏற்பாடுகள் செய்தனர்...
இல்லங்க என் கணவர் தன் சாவை தன் காசில் தான் எடுக்க வேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து வைத்த பணம் அந்த டப்பாவில் இருக்கு என அந்த டப்பாவை கொடுத்தார்...அந்த டப்பாவில் உள்ள பணம் அத்தனையும் 500 ,1000 மாய் இருந்தது...செல்லாக்காசாய் இருந்த அந்த பணத்தை ஒன்றும் செய்ய முடியாமல் உறவுகள் உதவி உடன் சாஸ்திர சம்பரதாயத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டது..
பாழா போன ஆட்சியில இப்படி பொது மக்களை துன்புர்த்தி கையில காசு இருந்தும் பிச்சை எடுக்காத குறையா..தெரு தெருவா அலைஞ்சு பேங் வாசல்ல காத்திருந்து ஏத்தன பேரு மயக்கி விழுந்து
இந்த 500 , 1000 ம் மாற்றத்தால் எத்தனை பேரு செத்து போய்ட்டாங்க.எத்தனை பெண்கள் தாலிய அறுத்துட்டாங்க...இன்னும் இந்த நாட்டுல என்னவெல்லாம் நடக்குமே தெரியல.. ஆள தெரியாதவனுக்கு ஆட்சியை கொடுத்த எப்படி இருக்கும். குரங்கு கைல பூ மாலை கொடுத்த மாதிரிதான். அந்த பகுதி முழுக்க இப்படித்தான் பேசி கொண்டனர்..
சில்லறை தட்டு பாடு சிரிச்சு போச்சு..பண மாற்றம் நாறிப்போச்சு..மக்களின் மணமும் மாறிப்போச்சு...இனி இந்த மவராசன் திசை தெரியாமல் போய்விடுவான் என கோஷம் எழுப்பி கொண்டு ஒரு கூட்டம் திரிய தொடங்கிவிட்டது......
ஆங்காங்கே போராட்டம் உண்ணாவிரதம் பந்த் அர்த்தால் பஸ் ஓட வில்லை ரயில் ஓடவில்லை எதிர் கட்சிகள் அமளி பார்லி முடக்கம் சொல்லி மாளாத செயல் எல்லாம் நடக்கிறது இந்தியாவில்.
இது தான் இந்தியா பாரத நாடு.. பாருக்குள்ளே எங்கள் பாரதம் இது தான் பாரதம்..இதுதான் பிரதமர்...பொது மக்களாகிய நாங்கள் தான் கேள்வி குறி???
அரசு அச்சடித்த பணமே செல்லாது..கருப்பு பணம் கள்ளப்பணம் பொது மக்களிடம் இல்லை..கள்ளப்பணத்தை வைத்திருப்பவன் பாதுகாப்பாய் இருக்கிறான்..நல்ல பணம் வைத்திருப்பவன் நாயாய் அலைகிறான்..
இப்படியாய் பேசி திரிந்த அரசியல் கட்சிகள்.
.இதையெல்லாம் பார்க்கும் போது இந்தியா எங்கே செல்கிறது என்பது எல்லோருக்கும் கேள்வி குறியாகவே இருக்கிறது...இறைவன்தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்பது இந்தியர்களின் பிரார்த்தனையாக உள்ளது..
இறைவனே உன் ஆசிர்வதத்தை இந்தியர்களுக்கு தா இந்தியாவிற்க்கு தா.அல்லல் படும் மக்களை காப்பாற்ற வந்து விடு என்பதே அனைத்து இந்தியர்களின் வேண்டுதலாக இருக்கிறது.....

எழுதியவர் : மன்சூர் அலி சவூதி அரேபிய ர (4-Dec-16, 3:37 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : sellaa kaasu
பார்வை : 290

மேலே