சில்லென தீண்டாதே
"சில்லென தீண்டாதே"
அதிகாலை நேரம் 'ஊரில் இருக்கும் பிள்ளைகள் எல்லாம் பள்ளிக்கு போறாங்க எழுந்திருடா ரஞ்சித்' என்ற குரலோடு தினமும் விழித்துக் கொண்டே இருந்தது.. அவனது கல்வி கனவும். ஜந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம்.. குடியால் குடிகெடுத்த தந்தையின் இறப்போடு பள்ளி படிப்பும் இறந்துவிட.. தந்தையின் இழப்பையும் தாண்டி 'கல்வி கனவு' அவனை இன்றும் சில்லென தீண்டிக் கொண்டிருந்தது
தாயின் குரல் கேட்டு அவசரமாய் எழுந்தான்.. அரைவயிற்றுக் கஞ்சியை குடித்ததும் விரைந்தான்.. பள்ளி செல்லும் தன் நண்பர்களோடு நடந்தான்.. பாதியில்தான் உணர்ந்தான் பேனா இருந்த கரமதில் புல்லாங்குழல் இருப்பதை.. மாறிய எண்ணத்தோடு தன் பாதையையும் மாற்றியவன் பூங்காவை அடைந்ததும்.. புதைக்கத் தொடங்கினான்.. புல்லாங்குழல் இசையில் தன் கனவுகளை.
தினமும் சில்லரை விழும் சப்தம் இடையூறு செய்துவந்த நிலைமாறி இன்றோ.. குரலொன்றை கேட்டு குழலோசையை நிறுத்தியவன் "நான் உன் உறவேதான்டா.. இனி இந்தநிலை வேண்டா.. நாளை முதல் நீ படிடா கண்ணா" என்றதும் "இத்தனை நாட்களாய் ஆறாம் விரலாய்
ஆகிப்போன அந்த புல்லாங்குழலை...
பூங்கா வாசலில் தூக்கி
எறிந்துவிட்டு... நடந்த ரஞ்சித் தின்
நெஞ்சில்.. கார்மேகம் கரைந்து
கொண்டிருந்து.. விரைவில் தன் வானம்
வெளுத்து பாதை புலப்படும் என்ற
நம்பிக்கையில் நடக்க ஆரம்பித்தான்..
-மூர்த்தி