திருடர்களே, வரிசையில்

ஒரு நாட்டை ஒரு முட்டாள் மன்னன் ஆண்டுவந்தான். அவனுடைய நிர்வாக திறமையின்மை காரணமாக அடிக்கடி களவு சம்பவங்கள் நடந்து வந்தது. மக்கள் அனைவரும் மன்னனிடம் முறையிட்டனர்.

முட்டாள் அரசனோ நாட்டுமக்கள் அனைவரையும் வரிசையில் நிறுத்துமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிட்டான். அதே போல அனைவரையும் வரிசையில் நிறுத்திய போது ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி கொடுக்குமாறு ஆணையிட்டான்.

செய்வதறியாத மக்கள் ஏனென்று வினவிய போது "எப்படியும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இந்த கூட்டத்தில் தான் இருப்பார்கள். அவர்களுக்கும் தண்டனை கிடைத்துவிடுமல்லவா" என்று கொக்கரித்தான்.

பொதுமக்கள் "தவறு செய்யாத எங்களுக்கு எதற்கு தண்டனை? என்று கேட்ட போது "நாட்டின் நன்மைக்காக நூறு கசையடியை கூட தாங்க முடியாதா" என்று அங்கலாய்த்தான்.

இதுவும் நல்லா தானே இருக்கு நரேந்திர மோடிஜி!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (4-Dec-16, 7:02 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 255

மேலே