தனலட்சுமி

ஆயிரம் லட்சுமிகள்
விழிகளை தாக்கினாலும்
இதயத்தை தாக்கி
இடம்புரியா இன்பம் தந்தவள் நீயே
என் தனலட்சுமி...

அழகே உன் அழகை
கவிபாட முடியாமல்
கம்பனும் கண்ணனும்
தோற்றிருப்பார்
உன் கார்குழலில் முத்தேவரதிகளும் வீற்றிருப்பார்....

சிகப்பு திலகத்தில் திண்டாடவைத்து வளைந்த புருவத்தில் வான்வழி தாக்குதல் நடத்துகிறாய்....

உதடுகள் அசையாமல் பேசுகிறாய்
அசைந்து போகிறது
என் உலகம்.....

கடல்நீரும் கணக்கீட்டில் முடியும் கன்னி உன் கருவிழி போடும் கணக்கீட்டில் சூத்திரங்களும் தோற்றுப்போகும்....

அழகே மூன்றெழுத்தால்
சுவாசித்து மூன்று நூறு
சென்மங்கள் நானாக நீ வேண்டும் என்றுரைத்தாய்...

உன் அழகை எடுத்துரைக்க
காகிதங்களும் காலங்களும் போதவில்லை....
சொன்னாலும் புரியாத
புதிதான கவிக்கோலங்கள் நீ....

மெய்யான இன்பங்கள் பொய்யாக தாக்குதே...
தெரியாத சோகங்கள்
தெரியாமலே போனதே...

பித்தனாய் எழுத்துகள் பதிக்கிறேன் உன்னால்...
என்னை புனிதனாய் மாற்றி என் இதயதேசத்தை ஆள வா! தமிழ் மகளே....
தனலட்சுமி!!!

எழுதியவர் : Siva (4-Dec-16, 4:45 pm)
பார்வை : 81

மேலே