முதல் சந்திப்பு

நம் இரு கண்கள் பார்வை கொண்டது
நம் செவியில் கீதங்கள் ஒலித்தது
நாம் மீண்டும் பிறக்க நேர்ந்தது
நமக்கு மட்டும் இது உணர்ந்தது!

அன்று உயிருக்கு முதல் முறை
அன்று மனதுக்குள் நூறு அலை
அன்று காலுக்குள் நடனக் கலை
அன்று விண்வெளியில் காதல் அலை

நாம் தொலைந்தது போலே தொலைந்தோம்
மீண்டும் கிடைத்தது போலே கிடைத்தோம்
எங்கோ பறந்தது போலே பறந்தோம்
மீண்டும் தொலைந்தது போலே தொலைந்தோம்!

இதயத்தில் விட்டு விட்டு இடிமுழக்கம்
வயறு நிறைந்தும் கூட பசியெடுக்கும்
கண்கள் இரவோடு சூரியனை எதிர்பார்க்கும்
உனக்கும் கூட இது நடந்திருக்கும்!

கிரகங்கள் போக இதமான பயணம்
நிலவுக்குள் தங்க அழகான தருணம்
வரவேற்க கிரகத்தில் காதலின் சலனம்
இனியோடு இறந்துபோகும் நம்மோட மரணம்!

நேரங்கள் பின்னோக்கி ஓடிடவே கூடும்
வாழ்க்கையும் பின்னோக்கி ஓடிடவே கூடும்
உலகமே பின்னோக்கி சுழன்றிடவே கூடும்
நாமிருவர் முன்னோக்கி நடந்திடுவே கூடும்!

நிகழ்காலம் எதிர்காலம் எல்லாமே மறந்து
எதிர்கால தேவைகள் அழிந்தாலும் அழிந்து
இறந்தகால நேரமே நிகழ்கால விருந்து
அக்காலம் நிலைத்திருக்க வேண்டுமே மருந்து!

எதுபார்த்த போதும் வியப்புகளே இல்லை
எதுஇழந்த போதும் தவிப்புகளே இல்லை
எதுவந்த போதும் பூரீப்பே இல்லை
கண்ட முதல்சந்திப்போடு ஆனந்த தொல்லை!

எழுதியவர் : (4-Dec-16, 1:53 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
Tanglish : muthal santhippu
பார்வை : 315

மேலே