விழித்து எழு

நெடுஞ்சாலையில்
எம் கல்லூரி சோலை.

சிட்டுக்கள் சிறகடிப்பதும்
மொட்டுக்கள் மலரதுடிப்பதும்.
இங்கேதான்.

வித்துக்களே வாருங்கள்
நல் விளைநிலம் இங்கே.

நல் எண்ணம் விதைப்போம்,
பார் எங்கும் உயர்வோம்.
நாளைய பாரதத்தின்
ஒலியாவோம்.

வன் களை எடுப்போம்,
நல் கலையோடு
பல்கலை கற்போம்.

வாருங்கள்
வழிகாட்டுகிறோம்.
விழித்து எழுங்கள்
உயர்வை காட்டுகிறோம்.

எழுதியவர் : ரா .ஸ்ரீனிவாசன் (5-Dec-16, 2:05 pm)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
Tanglish : vizhitthu elu
பார்வை : 140

மேலே